Featured Posts

ஜாஃபர் அலி

ரமலான் மாதத்தின் சிறப்பு.

652. ”ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1899 அபூஹுரைரா (ரலி)

Read More »

தானம் வழங்கியவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.

651. யாரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இன்னாரின் குடும்பத்திற்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்திப்பவராக இருந்தார்கள். என்னுடைய தந்தை (அபூ அவ்ஃபா) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். ‘இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினர்க்கு கிருபை செய்வாயாக” என்று நபி(ஸல்) பிரார்த்தித்தார்கள்.

Read More »

நபி குடும்பத்தாருக்கு அன்பளிப்பு தர்மப்பொருட்கள்…

648. பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்” என்றார்கள். புஹாரி : 1495 அனஸ் (ரலி) 649. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று ‘(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ‘நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு …

Read More »

ஜக்காத் பொருள் நபி குடும்பத்தாருக்கு ஹராம் என்பது பற்றி..

645. மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹஸன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு …

Read More »

காரிஜிய்யாக் கூட்டத்தார்

644. நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், ‘காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி (ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் …

Read More »

கவாரிஜ்களை கொல்ல அனுமதி.

643. இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதை விட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். …

Read More »

கவாரிஜ்கள் பண்புகள்.

638. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஜிஇர்ரானா’வில் வைத்து போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் அவர்களிடம், ‘நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(இறைத் தூதராகிய) நானே நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் (என்னைப் பின்பற்ற வேண்டிய) நீ வழிதவறிப் போய் விடுவாய்” என்று பதிலளித்தார்கள். புஹாரி : 3138 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). 639. அலீ (ரலி) (யமனிலிருந்து) நபி (ஸல்) …

Read More »

இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றோருக்கு உதவுதல்.

632. ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ், தன்னுடைய தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷிகளில் சிலருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே அன்சாரிகளில் சிலர், ‘தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் எதிரிகளுடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டு விடுகிறாரோ” என்று பேசிக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை …

Read More »

வறியோர்க்கு தீய காரியம் செய்யாமலிருக்க தானம் செய்தல்

631. நபி (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் குழுவினருக்கு கொடுத்தார்கள். அவர்களில் ஒருவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் இறைநம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்” என்று ரகசியமாகக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவரை முஸ்லிம் (என்று சொல்)” என்றார்கள். சிறிது நேரம் மவுனமாக இருந்தேன். …

Read More »

தேவையுடையோர்க்கு தானம் செய்தல்.

629.நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களின் தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), …

Read More »