631. நபி (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் குழுவினருக்கு கொடுத்தார்கள். அவர்களில் ஒருவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் இறைநம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்” என்று ரகசியமாகக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவரை முஸ்லிம் (என்று சொல்)” என்றார்கள். சிறிது நேரம் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்தபோது, ‘இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு இறைநம்பிக்கையாளர் என்று கருதுகிறேன்” என்றேன். ‘அவரை முஸ்லிம் (என்று சொல்)” என்றார்கள். சிறிது நேரம் மவுனமாக இருந்தேன். தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்தபோது, ‘இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு இறைநம்பிக்கையாளர் என்று கருதுகிறேன்” என்றேன். ‘அவரை முஸ்லிம் (என்று சொல்)” என்று நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். சிறிது நேரம் நான் மௌனமாக இருந்தேன். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு இறைநம்பிக்கையாளர் என்று கருதுகிறேன் என்றேன். ‘அவரை முஸ்லிம் (என்று சொல்”) என்றார்கள். பிறகு ‘(ஸஅதே!) நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் கொடுக்காதவர் என்னிடம் மிக நேசமானவராக இருக்கிறார். (அவருக்கு நான் கொடுத்ததற்கு) காரணம், (ஏதும் கொடுக்காதிருந்தால் குற்றம் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ என்ற அச்சம் தான்” என்றார்கள்.
வறியோர்க்கு தீய காரியம் செய்யாமலிருக்க தானம் செய்தல்
புஹாரி: 1478 ஸஅதுபின் அபீவக்காஸ் (ரலி).