142- என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-887: அபூஹூரைரா (ரலி)
Read More »நூல்கள்
கழுவி சுத்தம் செய்தலின் பலன் பற்றி…
141- பள்ளிவாசலின் மேற்புறத்தில் அபூஹூரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹூரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவுடைய சுவடுகளால் முகம், கை, கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை (அவர் உளூ செய்யும் உறுப்புகளில்) நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் …
Read More »குதிகால்களை சரியாக கழுவாதவர்களுக்கு…
140- மக்கள் உளூ செய்யும் தொட்டியிலிருந்து உளூ செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹூரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல்காஸிம் (முஹம்மத்) (ஸல்) அவர்கள், குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான் என்று கூறினார்கள் என்றார்கள். புகாரி-165: முஹம்மது பின் ஸியாத் (ரலி)
Read More »கால்களை நன்றாக நன்கு கழுவுதல் பற்றி…
139- நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளு செய்து கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணிரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) குதிக்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்! என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை …
Read More »தூக்கத்தில் ஷைத்தான் தங்கும் இடம்!
138- நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-3295: அபூஹூரைரா (ரலி)
Read More »மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…
137- உளூ செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும், மலஜலம் கழித்து விட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-161: அபூஹூரைரா (ரலி)
Read More »நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…
136- அம்ர் பின் அபீ ஹஸன், அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) இடம் நபி (ஸல்) அவர்களுடைய உளூவைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று உளூ செய்து காட்டினார்கள். பாத்திரத்திலிருந்து தண்ணீரை தமது கையில் ஊற்றி முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் …
Read More »உளுச் செய்யும் முறை………
135-உதுமான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இருகைகளையும் மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது கால்களையும் …
Read More »தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி…
பாடம் – 2 சுத்தம் 134- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாதவரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். புகாரி- 6954:அபூஹூரைரா (ரலி)
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (19)
மேலே விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு, சில மாற்றங்களுடன் மேனாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி விடுதலையடைந்த எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இடம் பெற்றது. அல்ஜீரியாவில் பெரும் இடர்பாடுகளுக்கிடையே நீண்ட காலமாக மக்கள் கடுமையாகப் போராடினார்கள்.ஈவிரக்கமற்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமன்றி சித்திரவதையும் செய்தனர். ஆனால் இக்கொடுமைகள் எதனாலும் அம்மக்களின் திடசங்கற்பத்தைக் குலைக்க முடியவில்லை. அவர்கள் தம் நீண்டகால தீவிரப் போராட்டத்தின் முடிவில் வெற்றியீட்டியபொழுது, அவர்கள் உயிரைப் பயணம் வைத்துப் போராடிப் பெற்ற …
Read More »