141- பள்ளிவாசலின் மேற்புறத்தில் அபூஹூரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹூரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவுடைய சுவடுகளால் முகம், கை, கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை (அவர் உளூ செய்யும் உறுப்புகளில்) நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.
புகாரி-136: நுஅய்ம் அல் முஜ்மிர் (ரலி)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library