1452. உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) ‘கபுஸத் நஃப்ஸீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (‘என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள் கொண்ட) ‘லம்சத் நஃப்ஸீ’ எனும் சொல்லையே கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6179 ஆயிஷா (ரலி) . 1453. உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் (‘என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் …
Read More »காலத்தைத் திட்டாதே.
இனிய சொற்கள் கூறுதல். 1449. வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :4826 அபூ ஹுரைரா (ரலி). 1450. திராட்சையை (‘கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) ‘அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். ‘மோசமான …
Read More »தொழுகையில் ஏற்படும் தவறுகள்
புகழனைத்தும் ஏகவல்லவனான அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் எங்கள் வழிகாட்டியும் நபியுமான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அவர்வழியைப் பின்பற்றியோர் அனைவர் மீதும் உண்டாகட்டும். ஆமீன் தொழுகையில் ஏற்படும் தவறுகள் எனும் பெயரில் இப்பிரசுரத்தை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதில் பெரும்பாலும் எம்மவர்கள் மத்தியில் தொழுகையின் போது நிகழக்கூடிய தவறுகளை நபிவழியின் நிழலிலே சுட்டிக் காட்டுகின்றேன்.
Read More »விலங்குகளுக்கு நீர் புகட்டுதல்.
1447. ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று …
Read More »பூனைகளைக் கொல்லத் தடை.
1446. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3482 இப்னு உமர்(ரலி) .
Read More »எறும்புகளைக் கொல்லத் தடை.
1445. இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே” என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3019 அபூ ஹுரைரா (ரலி) …
Read More »பல்லிகளைக் கொல்ல அனுமதி.
1443. நபி (ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லும் படி தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள். புஹாரி : 3307 உம்மு ஷரீக் (ரலி). 1444. ”பல்லி தீங்கிழைக்கக் கூடியது!”ஆனால், ‘அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை!” என்றும் ஆயிஷா (ரலி) கூறினார். புஹாரி : 1831 ஆயிஷா (ரலி).
Read More »இஸ்லாத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் எவை?
ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வரையறுக்கும் வரைச்சட்டங்களே இந்த ஐந்து தூண்கள்! இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு (மூலம் நலிந்தோர் மீதான அக்கரை), ஜகாத் (மூலம் பொருளாதார தூய்மை), வசதி படைத்தோர் மக்கா மாநகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவையே அந்த வரைச்சட்டங்கள்! 1. இறைநம்பிக்கை லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ்! அல்லாஹ் (எனும்) ஏக இறைனைத் தவிர வேறு இறைவன் இல்லை! முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய (இறுதித்)தூதர் ஆவார்கள். இறைநம்பிக்கையின் …
Read More »பாம்புகளைக் கொல்லுதல் வேண்டும்.
1441. நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (‘தாத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும் குட்டையான – அல்லது – சிதைந்த வால் கொண்ட (‘அப்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்” என்று சொல்ல கேட்டேன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் …
Read More »மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-2)
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வி தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அதில் குர்ஆன் இறைவேதம் என்பதையும் பைபிள் மனிதக் கரங்களால் மாசுபட்ட காரணத்தால் அதில் ஏற்பட்ட முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தோம். அவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நியாயமான மறுப்பைத் தரவியலாத கிறித்தவ சபை சில குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து குற்றச் சாட்டுகளைக் கூறியுள்ளது. குர்ஆன் மீது வைக்கப்படும் …
Read More »