Featured Posts

நல்ல கெட்ட நண்பர்கள் பற்றி….

1687. நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய் …

Read More »

நல்லவைக்குப் பரிந்துரை செய்.

1686. நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), ‘(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்” எனக் கூறினார்கள். புஹாரி :1432 அபூமூஸா (ரலி).

Read More »

அண்டை வீட்டார் நலம் பேணுதல்.

1684. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6014 ஆயிஷா (ரலி) . 1685. அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-2)

மறுமை வாழ்வென்பது பகுத்தறிவு ரீதியான உண்மை என வாதிக்கும் அல்குர்ஆன் அந்த நம்பிக்கையை இரு சிந்தனைகள் ஊடாக முன்வைக்கிறது. ஒன்று இறை நம்பிக்கையோடு தொடர்பு படுகிறது. இங்கு அவ்விரு சிந்தனைகளும் விளக்கப்படுகிறன: (1) இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும்: அல்குர்ஆன் மறுமை நாள் நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என விளக்குகிறது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்பவன் இதனைப் படைத்த ஒரு மாபெரும் படைப்பாளன் உள்ளான் என …

Read More »

தமக்குத் துன்பம் தராத விலங்குகளைத் துன்புறுத்துதல்.

1683. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை. அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை. அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3482 இப்னு உமர் (ரலி).

Read More »

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு எதிரான இன்னும் ஓர் அவதூறு

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புதிய தாக்குதல்கள் அமெரிக்க எழுத்தாளரான ஸெர்ரி ஜோன்ஸின் Jewel of Medina என்ற புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் தொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்துக்கு எதிரான Londonistan என்கின்ற நூலை கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட்ட பிரித்தானிய வெளியீட்டகமே இந்த நூலையும் வெளியிட முன்வந்துள்ளது.

Read More »

பாதையில் துன்பம் தரும் பொருட்களை அகற்றுதல்.

1682. ”ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :652 அபூஹுரைரா (ரலி).

Read More »

கூரான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் போது….

1679. ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!” என்று கூறினார்கள். புஹாரி :451 ஜாபிர் (ரலி). 1680. உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நம்முடைய பள்ளிவாசலில் அல்லது நம்முடைய கடைவீதியில் நடந்து சென்றால், அவர் ‘அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்’ அல்லது ‘தம் கைக்குள் (அதன் முனையை) மூடி வைத்துக் கொள்ளட்டும்’. அவற்றில் …

Read More »

முகத்தில் தாக்காதே.

1678. உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2559 அபூஹூரைரா (ரலி).

Read More »

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்.

1676. மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6114 அபூ ஹுரைரா (ரலி). 1677. நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் …

Read More »