சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
Read More »ரா.ஹாஜா முகையிதீன்
திருடர்கள் ஜாக்கிரதை!
ஹிஜ்ரி 1428, ரமளான் பிறை 23-ல், அஸர் தொழுகையை, வேலை செய்யும் இடத்தில் தொழுதுவிட்டு ஜித்தா (சவுதி அரேபியா), பாப்மக்கா செல்வதற்காக மஹ்ஜர் செனாயியாவிலிருந்து மினி பஸ்ஸில் (கோஸ்டர்) சென்றுக் கொண்டிருந்தேன். செனாயியா செக்கிங் பாயிண்டிற்கும் கிங் அப்துல் அஜிஸ் மருத்துவமனைக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டம் குறைந்த இடத்திலிருந்து பங்களாதேஷை சேர்ந்த ஒரு சகோதரர் 10-15 கிலோ எடை கொண்ட பார்சலுடன் பேருந்தில் ஏறினார். அவர் பதற்றமான சூழ்நிலையில் காணப்பட்டார்.
Read More »