Featured Posts

அபூ முஹை

இம்ரானா – நூர் இலாஹி.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் புறப்பட்டார். அவரை ஒரு ஆண் கண்டு போர்வையால் போர்த்தி அவரைக் கற்பழித்து விட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான். வேறொரு ஆடவர் அவளருகே வந்தார் இந்த மனிதன் என்னைக் கெடுத்துவிட்டான் என்று அப்பெண் கூறினாள். முஹாஜிர்களில் ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்ற அப்பெண் ”இந்த மனிதன் என்னைக் கெடுத்து விட்டான்” என்ற கூறினார். யார் அவளைக் கெடுத்ததாக அப்பெண் …

Read More »

பனூ முஸ்தலிக் போர்!

பனூ முஸ்தலிக் போரில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்டது நியாயமில்லை என்று இஸ்லாத்தை விமர்சிக்க முன் வருபவர்கள், – நபியின் மக்கா வாழ்க்கையில் நபித்துவம் பெற்ற ஆரம்பக் காலத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தபோது, இணைவைப்பவர்கள், நபியவர்களுக்கு பல இன்னல்களை விளைவித்து நபியைப்பின் பற்றியவர்களை கொடுமைகளுக்கு உட்படுத்தினார்கள், சந்தர்ப்பம் கிடைக்கும்போது கையில் அகப்பட்ட முஸ்லிம்களை வன்கொலையும் செய்தார்கள். இப்படி பதிமூன்று ஆண்டுகாலம் பட்ட தொல்லைகளும் – உயிரிழப்புகளும் …

Read More »

பூமியில் முதல் ஆலயம் காஃபா.

மக்காவில் இருக்கும் காஃபா என்னும் ஆலயத்தின் வரலாற்றுச் சான்றைச் சொல்லும் நபிமொழியை எடுத்தெழுதி அதில் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றுத் தகவல் தவறானது என்று நிரூபிக்கும் நோக்கத்தோடு முன் வைக்கப்பட்ட நபிமொழி இது.. நான் நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான் ‘பிறகு …

Read More »

தலாக் ஓர் விளக்கம் -2

முஸ்லிம் பெண்களின் விவாகரத்து உரிமை.மனைவியைப் பிடிக்கவில்லை என்றால் தலாக் – விவாகரத்துச் செய்யும் உரிமை, இஸ்லாத்தில் ஆண்களுக்கு இருப்பது போன்று, பெண்களுக்கு இல்லை என்று முஸ்லிமல்லாதோர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இஸ்லாம் பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறது என்பதை அறியாததால் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். கணவன் – மனைவி இருவருக்குமிடையே விவாவரத்துச் செய்யும் முறையில் வித்தியாசமிருக்கிறதே தவிர உரிமையில் வித்தியாசமில்லை. சில முஸ்லிம்களும் இஸ்லாத்தை அறியாததால் பெண்களின் விவாகரத்து உரிமை …

Read More »

மனைவி உங்கள் விளை நிலம்.

விதைக்கும் கருவைப் பேணி வளர்த்துக் குழந்தையாகப் பெற்றெடுக்கும் விளை நிலமே மனைவி – மனைவி உங்கள் விளை நிலம் என்று இங்கே உவமாணமாகச் சொல்லப்படுகிறது. அதுவும் அன்றைய யூதர்களின் தவறான நம்பிக்கையை மறுத்தே சொல்லப்பட்டது. ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்து யூதர்கள் சொல்லிவந்தார்கள். இந்தத் தவறான நம்பிக்கைக்கு எதிராகவே இவ்வசனம் அருளப்பட்டது. (புகாரி, முஸ்லிம்) …

Read More »

எழுதுவோம்.

//*காஃபாவைப் புனித ஆலயமாக இஸ்லாம் அறிவித்திருப்பதால் அங்கே கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய சிலக் கட்டுபாடுகள் உண்டு, இஸ்லாத்தைச் சார்ந்தவர்களாலேயே அதைப்பேண முடியும் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால் இயலாது. இது பற்றி விரிவாக என்பதிவில் எழுதவுள்ளேன்.—சிவா & ஈரோடு பிலிம்ஸ்,இது குறித்து எழுதுகிறேன். தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் உடனடியாக எழுத இயலாது என்றே நினைக்கிறேன். அதற்குள் அபூ முஹை அவர்கள் மேலே கண்டிருப்பது போன்று இது குறித்து விளக்கி எழுதுவார் …

Read More »

அவசரப் பதிவு.

//*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*// மனித குலம் அனைத்தும் தொடக்கத்தில் ஒரே தாய், தந்தையிடமிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்பதை ஆழமாக நம்புபவன் நான். நேசகுமாரின் கர்வத்தையே நான் சாடியிருக்கிறேன், அவரது பிறப்பைப் பற்றி எங்கும் வசைபாடியதில்லை. என் மீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தவறான புரிதல், அல்லது அவதூறாகவே இருக்க வேண்டும். எடுத்துக் காட்டினால் …

Read More »

தலாக் ஓர் விளக்கம் -1

தவறாகப் புரியப்பட்ட சட்டங்களில் ”தலாக்” – விவாகரத்துச் சட்டமும் அடங்கும். தங்களை அறிவு ஜீவி(?) என்று சொல்லிக் கொள்பவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ”தலாக்” சட்டத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள், இஸ்லாத்தில் பெண்ணியத்திற்கு பாதுபாப்பு இல்லை’ என்று அறிவு ஜீவித்தனத்திற்கு – இஸ்லாத்தை விமர்சிப்பதே அளவு கோலாகி விட்டது. இந்த அறிவு ஜீவிகளிடம் மறு பக்க சிந்தனையை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கட்டாயம் தலாக் – …

Read More »

நபியின் சொத்துக்கு வாரிசுண்டா?

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் நடந்த வரலாற்று சம்பவங்களை இஸ்லாத்தின் வரலாறாக மேற்கோள் காட்டுவது அறியாமையே என்று மீண்டும் இங்கே சொல்லிக்கொண்டு – நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்றச் சொத்துக்கள் தனியொரு மனிதர் விட்டுச் சென்றச் சொத்துக்களை மாதிரி வாரிசுரிமையைப் பெற்றிருக்கவில்லை. நபிமார்கள் விட்டுச் செல்லவதெல்லாம் தர்மமாகும் என்பதைப் பார்ப்பதற்கு முன் ”குமுஸ்” என்றால் என்னவென்பதை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். குமுஸ்போரில் எதிரிகள் விட்டுச் சென்றதில் – போரில் …

Read More »

அள்ளிப்போட்டதை விமர்சிக்காமல்!

பெயரில்லாதவரின் (அனானிமஸ்) பின்னூட்டத்திற்கு பதிலளிப்பது போல் நேசகுமார் சில கருத்துக்களை தமது பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். ”இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்” எனத் தொடங்கிய இவ்விவாதம் நேசகுமார் – ஸலாஹூத்தீன் என்ற இருவருக்கு மட்டும் சம்மந்தமுடையதல்ல. 03.12.2004ன் முதல் பதிவிலேயே ”அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்வது இதுதான்” என்றே தனது பொய்ப் பிரச்சாரத்தைத் துவங்கினார். //*நான் ஆரம்பத்திலேயே சலாஹ¤த்தீனுக்கு (9.02.2005 பதிவு) சொல்லியிருந்தது போன்று இது போன்றவைகளுக்கு நான் …

Read More »