இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46) உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50) கடவுள் …
Read More »பொதுவானவை
வாழைப்பழம்
அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் யாவுமே மனிதர்களுக்கு மிகப் பயனுள்ளது. அதில் நாவிற்கு இனிமையும், உடலுக்கு வலிமையும், முகத்திற்கு அழகையும் தரக்கூடிய புரதச் சத்துக்கள் நிறைந்த கனிவர்க்கங்கள் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பட்ட வரப்பிரசாதமே. நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை.
Read More »மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா?
சகோதரர் கோவி.கண்ணனின் மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா? என்ற பதிவில் மதங்களைப் பற்றிய அவரின் புரிந்து கொள்ளலை எழுதி இருந்தார், “எம்மதமும், கோட்பாடும் உலக மக்களை மேம்படுத்தாது” என்று எழுதி இருந்தது சரியல்ல;. மற்ற மதங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அவரின் கூற்றுக்கு எதிர்வினையாற்றலாம். இஸ்லாம் உலக மக்களை மேம்படுத்தியது, மேம்படுத்திக் கொண்டிருக்கிறது, மேம்படுத்தும் என்பதைச் சொல்லவே இப்பதிவு. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான மார்க்கம் …
Read More »கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி!
1997 ஆம் ஆண்டு கோவையில் காவல்துறையும் சங்பரிவாரும் இணைந்து நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் அப்பாவி முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் தகர்க்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அன்றைய கருணாநிதி ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை.
Read More »குண்டு வெடிப்புகள்: பொறுப்பேற்றவர்களும் பொறுப்பற்றவர்களும்!
கோழைகள், காட்டுமிராண்டிகள்,………..இன்னும் என்னென்ன கடுஞ்சொற்கள் உள்ளனவோ அவையும், இறைவனின் சாபமும் குண்டுவைத்தவர்கள் மீது உண்டாகட்டும்! ஒவ்வொருமுறை குண்டு வெடித்ததாகக் கேள்விப்பட்டதும் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இஸ்லாத்தைப் பலிகடாவாக்கி அக்கிரமம் செய்வார்களோ தெரியவில்லை. மாபாதகர்கள்! குண்டு வைத்தவர்கள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியானவர்களா? உள் நாட்டுக் கைக்கூலிகளா? முஸ்லிம்களின் பெயரைச்சொல்லி அரசியல் குளிர் காயும் சண்டாளர்களா? யாராக இருந்தாலும் வழக்கமாக ஏதேனுமொரு அமைப்பு பொறுப்பேற்கும் அல்லது பொறுப்பேற்றதாகச் சொல்லப்படும். இதுபோன்ற கோழைத்தனமானத் …
Read More »சமூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர்
Read More »சீனா
சென்னை பூங்கா நகர் வணிக அங்காடிகள் பகுதியை சைனா பஜார் என்றழைத்ததுண்டு. வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு பர்மா பஜார். கடந்த ஆகஸ்ட் மாதம் விமரிசையாக சுதந்திர தின விழாக்களை கொண்டாடிவிட்டு பணி நிமித்தமாக சீனா வந்திறங்கியதிலிருந்து ஆச்சரியம் பூச்சொறிந்துக் கொண்டு தானிருக்கிறது.
Read More »முடிவுரை
இதுவரை மக்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்ற விலக்கப்பட்ட காரியங்களை முடிந்தவரை இங்கு கூறியுள்ளோம். எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவனுடைய திருப்பெயர்களின் மூலம் இறைஞ்சுவோமாக! அவன் நமக்கும் அவனுக்கும் நாம் மாறு செய்வதற்கும் இடையில் அரணாக இருக்கக்கூடிய இறையச்சத்தையும், அவனுடைய சுவனத்தின் பால் சேர்த்து வைக்கக்கூடிய வழிபாட்டையும் தருவானாக! நம்முடைய பாவங்களையும், நம்முடைய காரியங்களில் நாம் வரம்பு மீறுவதையும் அவன் மன்னித்தருள்வானாக! அவன் விலக்கிய விலக்கல்களை விடுத்து அவன் ஹலாலாக்கியவற்றை மட்டும், அவன் …
Read More »முஸ்லிமை வெறுத்தல்
முஸ்லிம்களுக்கு மத்தியில் உறவு முறிவை உருவாக்குவது ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று. ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்ற பெரும்பாலோர் மார்க்கம் அனுமதிக்காத காரணங்களுக்காகவெல்லாம் தம் சகோதர முஸ்லிமை வெறுக்கின்றனர். தங்களிடையே உள்ள உறவை முறித்துக் கொள்கின்றனர். ஒன்று கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட ஏதாவது கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது அற்பமான காரணமாக இருக்கலாம். இந்த உறவு முறிவு நீண்ட காலத்திற்கு நீடிக்கும். சில சமயம், நான் உன்னிடம் பேசவே …
Read More »முகத்தில் அடிப்பதும் சூடு போடுவதும்
‘முகத்தில் அடிப்பதையும் முகத்தில் சூடு போடுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’ என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்) முகத்தில் அடித்தல்: சில தந்தையர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளைத் தண்டிக்கும் போது கையால் அல்லது வேறு பொருளால் அவர்களின் முகத்தில் அறைந்து விடுகின்றனர். அதுபோலவே சிலர் தமது வேலைக்காரர்களை அடித்து விடுகின்றனர். இது ஹராமாகும். மேலும் எந்த முகத்தின் மூலம் அல்லாஹ் மனிதனைக் கண்ணியப்படுத்தி இருக்கின்றானோ அந்த முகத்தை …
Read More »