சகோதரர் கோவி.கண்ணனின் மதங்கள் உலக மக்களை மேம்படுத்துமா? என்ற பதிவில் மதங்களைப் பற்றிய அவரின் புரிந்து கொள்ளலை எழுதி இருந்தார், “எம்மதமும், கோட்பாடும் உலக மக்களை மேம்படுத்தாது” என்று எழுதி இருந்தது சரியல்ல;. மற்ற மதங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அவரின் கூற்றுக்கு எதிர்வினையாற்றலாம். இஸ்லாம் உலக மக்களை மேம்படுத்தியது, மேம்படுத்திக் கொண்டிருக்கிறது, மேம்படுத்தும் என்பதைச் சொல்லவே இப்பதிவு.
உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான மார்க்கம் என்றால், உலகமக்களின் பிரச்சினைகளும் பொதுவானதாகவும் அதற்கான தீர்வுகள் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்.உலக மக்களின் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள் இப்படித்தான் இருந்து வருகின்றன.
இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் கிறிஸ்தவத்தின் மேம்படுத்தப்பட்டவையே என்ற போதிலும் கிறிஸ்தவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக மது/போதை,விபச்சாரம் போன்றவை இரண்டிலுமே தடுக்கப்பட்டவை.கிறிஸ்தவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமை சிலமணி நேரங்களே கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.!
இஸ்லாமியத் தீர்வுகள்,மற்றவற்றைவிட எதார்த்தமாகவும் நியாயமாகவும் உள்ளன. ஒரு கன்னத்தில் அறைந்தவரிடம் மறுகன்னத்தைக் காட்டு என்பது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் உண்மையில் பாதிக்கப்பட்டவரின் உள்மனம் ஏற்காது. உலகலாவிய மார்க்கமென்றால்,அதன் வழிகாட்டல்களும் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவானவையாக இருக்க வேண்டும். எக்காலத்திற்கும் பொருத்தமான,தனிநபரால் மாற்ற முடியாதத் தீர்வாதாக இருக்க வேண்டும். உலகம் எதிர்கொண்டுள்ள நீண்டகாலப் பிரச்சினைகள் சிலவற்றையும் அவற்றிற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளையும் பார்ப்போம்:
கொலை,கொள்ளை, திருட்டு,இலஞ்சம், ஊழல், மது, சூது, விபச்சாரம், பொய், புறம்,அவதூறு/வீண்பழி ஆகியவை உலக மக்கள் அனைவருக்கும் பொது. ஏழை-பணக்காரர், முதலாளி-தொழிலாளி, கடனீந்தோர்-கடனாளி, நுகர்வோர்-வியாபாரி, வட்டி,கடன்,வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் ஆகிய பொருளியல் பிரச்சினைகளுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் நிரந்தர வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் உள்ளன. கற்பழிப்பு, வரதட்சணை, விவாகரத்து, சிசுக்கொலை, கருக்கலைப்பு போன்ற பெண்ணிய்ப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் அழகியத் தீர்வுகள் உள்ளன.
எயிட்ஸை ஒழிக்க முடியாது. ஆனால், பரவலைத் தடுக்கலாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். தீர்வாக, ஆணுரை, கட்டுப்பாடுடன்கூடிய உடலுறவு என்ற தீர்வுகளைச் சொல்கிறார்கள்.கொள்ளிக்கட்டையால் முதுகு சொறியலாமா? தீவிரவாதம் குறித்து உலகநாடுகள் கவலை படுகிறார்கள். தீவிரவாதத்தை ஒழிப்பதற்குப் பயங்கரவாதத்தைக் கையால்கிறார்கள்.
உலக வெப்பமயம், நதிநீர் பங்கீடு, நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகளுக்கு மதங்கள் காரணமல்ல;ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத் தன்மையும் பொருளாசையுமே காரணம்.சுருக்கக்கூறின் தனிநபர் பிரச்சினை முதல் சர்வதேசப் பிரச்சினைவரை,படுக்கையறை முதல் பாராளுமன்றம் வரை எல்லாவகையானப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வுண்டு. அதாவது,உலக மக்களை மேம்படுத்தும் தகுதி இஸ்லாத்திற்குச் சற்று அதிகமாகவே உள்ளது.
//இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் கிறிஸ்தவத்தின் மேம்படுத்தப்பட்டவையே என்ற போதிலும் கிறிஸ்தவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக மது/போதை,விபச்சாரம் போன்றவை இரண்டிலுமே தடுக்கப்பட்டவை.கிறிஸ்தவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமை சிலமணி நேரங்களே கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.!// – தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இல்லை போலிருக்கிறது. செய்திகளில் வரும் கொலை, கொள்ளை செய்யும் இஸ்லாமியர்கள் எல்லாம் இஸ்லாத்தை ஒழுங்காக பின்பற்றுபவர்களா? ஏதோ கிறிஸ்தவர்கள் எல்லாம் மோசம் போலவும் இஸ்லாமியர்கள் எல்லாம் பெரிய ஒழுங்கு போலவும் பேசுவது சிரிப்பைத்தான் வரவழைக்க உதவுமே தவிர அதில் எந்த உண்மையும் கிடையாது. எல்லா மதங்களிலும் நல்லவர்களும் இருபபர் கெட்டவரும் இருப்பர். இஸ்லாத்தை உயர்வாகச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. அதே நேரம் போகிற போக்கில் கிறிஸ்தவர்கள் மீது புழுதி வாரி தூற்ற வேண்டாம்.
‘அதாவது,உலக மக்களை மேம்படுத்தும் தகுதி இஸ்லாத்திற்குச் சற்று அதிகமாகவே உள்ளது’
அதன் விளைவுதான் தலிபானும்,
இஸ்லாமிய திவீரவாதமும் :(
நல்லது நல்லடியாரே,
நீங்கள் சொல்லும் இஸ்லாம் கொள்கைகளுடன் எந்த நாட்டு மக்கள் இருக்கிறார்கள் ?
4 மனைவிகள் வரை திருமணம் செய்ய அனுமதி இருப்பதை அனுகூலமாக்கிக் கொள்ளும் அளவுக்குக் கூட மற்ற கொள்ளகைகளை அதே ஆண் பின்பற்றுவதில்லையே. வட்டி வாங்கும் வங்கிகள் கூட இஸ்லாமிய நாடுகளில் உண்டு.
கொள்கைகள் எல்லா மதத்திற்குமே உண்டு, அதனால் தான் அவைகள் மதங்களாக அறியப்படுகின்றன.
மதங்கள் இல்லாமல் மக்கள் இருக்க முடியும். அவர்கள் நல்லவர்களாகவும்
இருக்க முடியும். ஆனால் மக்கள் இல்லாமல் மதங்கள் இருக்க முடியாது.
மத வெறி பிடித்தவர்கள் தான் தங்கள் மதமே உயர்ந்தது என்பது
மட்டுமில்லாமல், அடுத்த மதங்கள் தாழ்ந்தது என்றும் கூக்குரலிடு-
வார்கள்.
Robin //இஸ்லாத்தை உயர்வாகச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. அதே நேரம் போகிற போக்கில் கிறிஸ்தவர்கள் மீது புழுதி வாரி தூற்ற வேண்டாம். //
ராபின்,
ஒப்பீட்டிற்காகச் சொன்னதில் அப்புறம், முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் பெயர் கொண்டவர்களெல்லாம் உலகமகா உத்தமர்கள் என்று நான் சொல்லவில்லையே! சகோதரர். கோவி. கண்ணன் “மதங்கள் உலக மக்களை மேம்படுத்தாது” என்று எல்லா மதங்களையும் பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந்தார். அவரின்கூற்று தவறென்பதைச் சொல்லவே இஸ்லாம் குறித்துச் சொல்ல வேண்டி இருந்தது.
கிறிஸ்தவர்கள் குறித்த ஒப்பீடு இப்பதிவுக்குத் தேவையில்லாததே. எனினும் உண்மைக்குப் புறம்பாகச் சொல்லியிருந்தால் சுட்டுங்கள்.திருத்திக் கொள்கிறேன்.
Anonymous: ‘அதாவது,உலக மக்களை மேம்படுத்தும் தகுதி இஸ்லாத்திற்குச் சற்று அதிகமாகவே உள்ளது’
அதன் விளைவுதான் தலிபானும்,இஸ்லாமிய திவீரவாதமும் :(
முன்பெல்லாம் பாகிஸ்தானையும் சவூதியையும்தானே இஸ்லாத்தைக் குறைகூற துணைக்கழைப்பீர்கள்! அமெரிக்காவின் தயவில் 9/11 க்குப் பிறகு ஆப்கானிஸ்தானையும் சேர்த்துக் கொண்டுள்ளீர்கள்! தலிபான் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அமெரிக்கா சொல்வதை மட்டும் உங்களைப் போல் நாமும் கேட்டுக்கொண்டிருப்போம்!
மேலும் அறிந்து கொள்ள http://govikannan.blogspot.com/2008/09/blog-post_999.html?ext-ref=comm-sub-email ஐயும் ஒருதபா பாருங்க அணானி அண்ணாச்சி! ;-)
rangudu : //மதங்கள் இல்லாமல் மக்கள் இருக்க முடியும். அவர்கள் நல்லவர்களாகவும் இருக்க முடியும். ஆனால் மக்கள் இல்லாமல் மதங்கள் இருக்க முடியாது. மத வெறி பிடித்தவர்கள் தான் தங்கள் மதமே உயர்ந்தது என்பது மட்டுமில்லாமல், அடுத்த மதங்கள் தாழ்ந்தது என்றும் கூக்குரலிடு-
வார்கள். //
ரங்குடு,
மனிதர்களெல்லோரும் நல்லவர்களாகவே இருந்திருந்தால் மதங்களுக்கான அவசியமே இருந்திருக்காது. ஆனால், அது சாத்தியமில்லை. மத வழிகாட்டல் இன்றி நல்லவர்களாகவே இருந்து வருகிறோம் என்பது வெறும்சால்ஜாப்பு. நாத்திகர்களும் மதவழிகாட்டலைப் பின்பற்றவே செய்கிறார்கள்! கடவுளுக்கு நன்றி செலுத்துவது மட்டுமே மிஸ்ஸிங்! அவ்வளவுதான்! என்ன கொஞ்ச காலத்திற்குக் கடவுளில்லை என்பார்கள். பின்னர் சிலையாகி கடவுளாக்கப் படுவர். உம். பெரியார்!!
அப்புறம், மதங்களில்லாமல் மனிதர்கள், மனிதர்களில்லாமல் மதம்! என்பது என்ன வகையான வாதம் என்று தெரியவில்லை. மதமில்லாமல் ஊர்வன, பறப்பன,நடப்பன கூடத்தான் இருக்கின்றன! பாம்பும், தேளும்கூட நாத்திகர்கள்தான்! ;-)
இஸ்லாம் மதத்தில் ஒருவர் தப்பு செய்தல் அவர் முஸ்லீம் இல்லை என்று சொல்ல்ரிககளே
அதே ஒரு கிறிஸ்டியன் மதத்தில் ஒருவர் தப்பு செய்தல் கிறிஸ்டியன் இல்லை என்று சொல்ல மடெஅன்கிரிகல்லே ஏன் ?