– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் லிபியா ஒரு இஸ்லாமிய நாடு! போராட்டக் குணம் கொண்ட நாடு! இத்தாலியின் அடக்குமுறைக்கு எதிராக உமர் முக்தாரின் தலைமையில் வீரியம் மிக்க சுதந்திரப் போராட்டம் நடத்திச் சாதனை படைத்த நாடு! சர்வாதிகாரி முஸோலினியின் அதிகாரக் கனவை ஆட்டங்காணச் செய்த உயிரோட்டம் மிக்க சுதந்திரப் போராளிகளைப் பெற்றெடுத்த நாடு! வீரம் விளைந்த மண்!
Read More »தலையங்கம்
மக்கள் புரட்சியால் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழுமா?
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) டியூனிசியாவின் ஜெஸ்மின் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து, லிபியா ஜோர்தான், சிரியா, பஹ்ரைன், ஈரான், மொரொக்கோ என முஸ்லிம் நாடுகளை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கதிகலக்கிக்கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சியாளர்களின் அடிவயிற்றில் இந்தப் புரட்சிகள் தீ மூட்டியுள்ளன. அடுத்த நாடு எது என்ற மனநிலையில் மன்னர்கள் வினாடிகளைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
Read More »அச்சமூட்டும் இயற்கைச் சூழ்நிலை
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) டிசம்பர் 26 மறக்க முடியாத தினம்! இலட்சக்கணக்கான உயிர்களைக் குடித்துக் கோடிக்கணக்கான சொத்துகளைக் காவு கொண்ட தினம்! பூவுக்குள் பூகம்பம் போன்று நீருக்குள் இவ்வளவு ஆக்ரோஷமா? தண்ணீருக்கு இப்படியொரு சக்தியா? எனத் திறந்த விழிகளை மூடாமல் மக்களை அதிர வைத்த தினம்! ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டாலும் டிசம்பர் வரும் போது கடலோரப் பிரதேச மக்களைச் சுனாமி அச்சம் தொற்றிக்கொள்கின்றது.
Read More »நபிகள் நாயகத்தின் தீர்ப்பை நோக்கி நகருமா முஸ்லிம் காழி நீதிமன்றங்கள்?
-அபூ நதா மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனிலும், அண்ணல் நபியின் போதனைகளிலும் தீர்வுகளைக் காணலாம், அவற்றில் நீதித்துறை சார்ந்த சட்ட திட்டங்களும் உள்ளடங்கும். இஸ்லாமிய நீதித்துறை பற்றியும், அதன் தீர்ப்புக்கள் பற்றியும் அறியாத அரைகுறைகளால் இஸ்லாமிய சட்டங்கள் அர்த்தமற்ற முறையில் விமர்சிக்கப்படுகின்றதே தவிர புத்தி ஜீவிகளால் அவை என்றும் விமர்சிக்கப்பட்டதில்லை.
Read More »ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.
Read More »புகை! உனக்குப் பகை!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர்.
Read More »துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில் இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.
Read More »முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!
by Dr. Paul Craig Roberts கட்டுரையாளர், டாக்டர் பவுல் கிரேக் ராபட்ஸ் அவர்கள், அமெரிக்க கருவூலத்தின் (Treasury) முன்னாள் பிரதிச் செயலர், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகையின் கூட்டு ஆசிரியர், ஹூவர் கலாசாலையிலே ஒரு ஆராய்ச்சியாளர், அரசியற் பொருளாதார விரிவுரையாளர். — முஸ்லிம்களோ சனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் …
Read More »உத்தம நபியை உரிய முறையில் நேசிப்போம்!
இஸ்லாத்தின் அடிப்படை “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்” எனும் ஷஹாதத் கலிமாதான். இதுதான் இஸ்லாத்தின் அத்திவாரம். இதன் மீதுதான் இஸ்லாத்தின் கொள்கை-கோட்பாடுகள், வணக்க-வழிபாடுகள், ஷரீஆ சட்டங்கள் என்பன கட்டியெழுப்பப்பட்டுள்ளன. நாம் “நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்” எனச் சாட்சி சொல்வது என்பது வெறும் வெற்று வார்த்தைகளால் மாத்திரம் உறுதியாகி விடாது.
Read More »இஸ்லாமும் பாடல்களும்
மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில் பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.
Read More »