51, 52. நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்…! ஹதீஸ் 51. இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘நிச்சயமாக என(து வாழ்நாளு)க்குப் பிறகு (உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான) சுயநலப் போக்கும் நீங்கள் வெறுக்கக்கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்!’ தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிடுகிறீர்கள்? நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் மீதுள்ள கடமையை நீங்கள் நிறைவேற்ற …
Read More »ரியாளுஸ்ஸாலிஹீன்
ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-50)
50. உமர்(ரலி) அவர்களின் உயர் பண்பு! ஹதீஸ் 50. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘உயைனா இப்னு ஹிஸ்ன் என்பார் (மதீனா) வந்து தன்னுடைய சகோதரர் மகனாகிய ஹுர்ரு பின் கைஸ் என்பாரிடம் தங்கியிருந்தார். உமர்(ரலி) அவர்கள் யார் யாரையெல்லாம் தங்களது அவையில் நெருக்கமான அந்தஸ்தில் வைத்திருந்தார்களோ அத்தகைய நபர்களுள் ஹுர்ரும் ஒருவர். குர்ஆனை கற்றறிந்த அறிஞர்கள்தான் உமர்(ரலி) அவர்களது அவைத் தோழர்களாகவும் ஆலோசகர்களாவும் இருந்தனர். அவர்கள் பெரிய வயதுடையவர்களாயினும் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-47-48-49)
47, 48, 49. கோபமும் துயரமும் ஹதீஸ் 47. முஆத் பின் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூ தாவூத், திர்மிதி) ஹதீஸ் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-45-46)
45, 46. வீரமும் கோபமும் ஹதீஸ் 45. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: பலசாலி என்பவன் (எதிரியை) கீழே வீழ்த்துபவன் அல்லன். மாறாக கோபத்தின்பொழுது யார் தன்னைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் தான் பலசாலி! நூல்: புகாரி, முஸ்லிம் அரபுகளிடத்தில் அஸ் ஸுரஆ என்பதன் அசல் பொருள், மக்களை அதிகமாக கீழே வீழ்த்துபவன் என்பதாகும். ஹதீஸ் 46. ஸுலைமான் பின் ஸுர்த்(ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நான் நபி(ஸல்) அவர்களின் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-44)
44. பெண் குலத்தின் முன்மாதிரி! ஹதீஸ் 44. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அபூதல்ஹா(ரலி) அவர்களின் மகன் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா அவர்கள் (ஏதோ ஒரு பணிக்காக) வெளியே சென்றிருந்தார்கள். அப்பொழுது அந்தச் சிறுவர் மரணம் அடைந்தார். அபூதல்ஹா திரும்பி வந்தபொழுது கேட்டார்கள்: ‘என் மகனின் நிலை என்ன?’ அதற்கு ‘அவர் முன்னைவிடவும் மிக அமைதியாக இருக்கிறார்’ என்று சிறுவரின் தாயாராகிய உம்மு ஸுலைம்(ரலி) அவர்கள் சொன்னார்கள்;. பிறகு இரவு உணவை …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-43)
43. சோதனையின் ரகசியம்! ஹதீஸ் 43. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘அல்லாஹ் தன்னுடைய ஓர் அடியாருக்கு நலன் நாடினால் அவனுக்கு (அவனுடைய பாவங்களின்) தண்டனையை இவ்வுலகிலேயே விரைவாகக் கொடுத்து விடுகிறான். மேலும் அல்லாஹ் தன்னுடைய அடியானுக்குத் தீங்கை நாடினால் அவனது பாவத்திற்குரிய தண்டனையை (உலகில்) அவனை விட்டும் தடுத்துக் கொள்கிறான். அந்தப் பாவத்தைச் சுமந்துகொண்டே மறுமை நாளினை திடுமென அவனை சந்திப்பதற்காக வேண்டி! மேலும் நபி(ஸல்) …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-42)
42. பொறுமைக்கு ஓர் அழகிய முன்மாதிரி! ஹதீஸ் 42. இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஹுனைன் யுத்தம் நடைபெற்றபொழுது ஃகனீமத் (அதாவது, போரில் கைப்பற்றப்பட்ட) பொருட்களின் பங்கீட்டில் நபி(ஸல்) அவர்கள் சில மனிதர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் என்பாருக்கு நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். உயைனா பின் ஹிஸ்ன் என்பாருக்கும் அதுபோல் கொடுத்தார்கள். மேலும் அரபு மக்களில் சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்த வேறு சிலருக்கும் வழங்கினார்கள். அந்நாளின் பங்கீட்டில் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-41)
41. அதோ! வெற்றி, வெகு தூரத்தில்…! ஹதீஸ் 41. கப்பாப் பின் அல்-அரத்து(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘(இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைத்த கொடுமை குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். அப்பொழுது அவர்கள், கஅபாவின் நிழலில், தங்களது சால்வையைத் தலையணையாக வைத்துக்கொண்டு (ஓய்வாக) சாய்ந்திருந்தார்கள். நாங்கள் சொன்னோம்: ‘எங்களுக்காக (அல்லாஹ்விடம்) தாங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?’ அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினரின் நிலைமை எவ்வாறு …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-39-40)
39, 40. தற்கொலை செய்தால் மட்டும் தொல்லை தீர்ந்துவிடுமா, என்ன? ஹதீஸ் 39. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரைத் துன்பத்திற்குள்ளாக்குவான்’ நூல்: புகாரி (இமாம் நவவி அவர்கள் சொல்கிறார்கள்) :يصب என்பதிலுள்ளالصاد க்கு فتح கொடுத்தும்كسر கொடுத்தும் இருவிதமாகவும் உச்சரித்திருக்கிறார்கள். ஹதீஸ் 40. அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘உங்களில் யாரும் தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-37-38)
37, 38. ஏன் இந்தத் துன்பங்கள்? ஹதீஸ் 37. அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி) மற்றும் அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: ‘களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலம் அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிமுக்குத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவனுடைய தவறுகளுக்குப் பரிகாரமாக்காமல் இருப்பதில்லை’ -: புகாரி, முஸ்லிம் (அல் வஸப்: …
Read More »