Featured Posts

நேற்று இன்று நாளை – குத்பா பேருரை

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (5)

இஸ்லாமிய அரசை வலுப்படுத்துதல்:இறைத்தூதர் அவர்கள் மக்காவில் முதன் முதலாகத் தம் பிரச்சாரத்தைத் தொடங்கிய போது மக்கள் அதனை கவனிக்கவில்லை. அவர்களது போதனையின் மீது சிலரே கூடிய கவனம் செலுத்தினர். அதைவிட மிகச் சிலர் தான் அண்ணலார் அவர்கள் மனிதனைப் பற்றியும், உலகைப் பற்றியும் அளித்த புதிய கருத்தினை ஏற்கும் மனநிலை உடையோராக இருந்தனர். அவர்களது தூதின் பொருளையும் அதன் விளைவுகளையும் விளங்கிக் கொள்ளத்தக்க நுண்ணறிவுத் திறனை ஒரு சிலரே பெற்றிருந்தனர். …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (4)

முதல் இஸ்லாமிய அரசு. முதலாவது இஸ்லாமிய அரசு மிகச் சிறிய நகர அரசாக உருவாகியது. சில சதுர மைல் பரப்புடையதாகவும், சில ஆயிரம் மக்களைக் கொண்டதாகவும் அது அமைந்தது. எனினும் இச்சிறு அரசு சில ஆண்டுகளிலேயே முழு அரேபியாவையும் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்து விட்டது. இவ்வெற்றிக்குக் காரணம், இஸ்லாமிய சன்மார்க்கக் கொள்கையின் ஒவ்வொரு முக்கிய அம்சத்தையும் அது தன்னகத்தே கொண்டிருந்ததாகும். அதில் இஸ்லாமிய இலட்சிய சமுதாயம் அதன் உண்மைத் தோற்றத்தில் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (3)

முதற் கட்டம்: இலட்சிய காலம்முதலாவது கட்டத்தில் இஸ்லாம் அதன் எளிமையான தூய உருவில் காட்சியளிக்கிறது. ஓங்கு புகழுடனும் மாசுமருவற்ற பேரொளியுடனும் மிளிர்கிறது. சிற்றின்பத்தில் திளைத்து ஒழுக்க, ஆன்மீக உணர்வுகள் மரத்துப் போன ஒரு சமுதாயத்தில் இஸ்லாம் பிறந்தது. நண்பர்களின் உறவின்றி தன்னந்தனியாக நின்ற வறிய, ஆனால் பிரபஞ்சத்தின் ஆன்மீக அம்சத்தினை நன்குணர்ந்த ஒரு மனிதரை மூன்று அடிப்படை நம்பிக்கைகள் மீது மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இறைவன் நியமித்தான். இறைவனில் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (2)

இனி, ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பதற்குக் கொள்ளப்படும் மற்றிரு பொருள்கள் பற்றிக் கூற விரும்புகிறேன். இப்பொருள்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என நான் கருதுகிறேன். முதலாவதாக ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ என்பது பின்வரும் பொருள்களைக் குறிக்கலாம்: இன்றைய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அழைப்பினை எவ்வாறு ஏற்றுள்ளனர்? எந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் இஸ்லாத்தின் முத்திரை பதிந்துள்ளது? அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாம் என்பது அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும் கண்ணியமானதாக்கவும் ஆற்றல் பெற்ற ஒரு சக்தியாகத் திகழ்கின்றதா? …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (1)

1. பிரச்சினையின் தன்மை. இஸ்லாத்தின் இன்றைய நிலை பற்றிப் பேசுமாறு என்னைக் கேட்டிருக்கிறார்கள். எனக்குத் தரப்பட்டுள்ள இவ்விடயத்தின் பொருளைத் தெளிவுபடுத்தவும், இவ்விடயம் எவ்வளவு விரிவானது என்பதை வரையறுத்துக் கூறவும், முதலாவதாக ஒரு சில வார்த்தைகளைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ‘இஸ்லாத்தின் இன்றைய நிலை’ பலவாறாக விளக்கப் பட்டுள்ளது. அதனால் தான் இவ்விடயத்தின் பொருளையும் விரிவையும் வரையறுத்துக் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்துக்குத் தரப்படும் நான்கு கருத்துக்களை நாம் …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! முன்னுரை

நூலைப் பற்றி: இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் 1963 டிசம்பர் 10 ஆம் தியதி கராச்சியில் நிகழ்த்திய பேருரையின் தமிழாக்கமே இச்சிறு நூல். இலங்கை ஜமா அத்தினரால் மொழி பெயர்க்கப்பட்டு கத்தரிலுள்ள இஸ்லாமிய பிரச்சார மையத்தினர் மற்றும் குவைத்திலுள்ள உலக இஸ்லாமிய மாணவர் கூட்டமைப்பின் துணையுடன் லபனானில் உள்ள ஹோலி குரான் பப்ளிசிங் ஹவுசினரால் வெளியிடப்பட்டது. இனி நூலின் முன்னுரையிலிருந்து சில வரிகள். “அல்லாஹ்வின் …

Read More »