இஸ்லாமிய அரசை வலுப்படுத்துதல்:
இறைத்தூதர் அவர்கள் மக்காவில் முதன் முதலாகத் தம் பிரச்சாரத்தைத் தொடங்கிய போது மக்கள் அதனை கவனிக்கவில்லை. அவர்களது போதனையின் மீது சிலரே கூடிய கவனம் செலுத்தினர். அதைவிட மிகச் சிலர் தான் அண்ணலார் அவர்கள் மனிதனைப் பற்றியும், உலகைப் பற்றியும் அளித்த புதிய கருத்தினை ஏற்கும் மனநிலை உடையோராக இருந்தனர். அவர்களது தூதின் பொருளையும் அதன் விளைவுகளையும் விளங்கிக் கொள்ளத்தக்க நுண்ணறிவுத் திறனை ஒரு சிலரே பெற்றிருந்தனர். ஆழ்ந்த மதிநுட்பமும், பண்பட்ட ஒழுக்க உணர்வும் அருளப் பெற்றிருந்த ஒரு சிலர் மட்டும் இப்புதிய சன்மார்க்க நெறியின் மேன்மையினை உனர்ந்து அதனை உளம் திறந்து ஏற்றுக் கொண்டனர்.
இக்குழு சிறியதாயினும் இதுவே எதிர்கால இஸ்லாமிய அரசின் கருவூலமாகத் திகழ்ந்தது. அவர்களின் கண்ணியமான நடத்தையும், தூய்மைமிக்க எளிய வாழ்க்கையும் பிறரைக் கவர்ந்தன. அவர்கள் ஒவ்வொருவராக இக்குழுவுடன் இணைந்து கொண்டனர். தொடக்கத்தில் நீர் சொட்டுவது போல ஒருவர் இருவராக வந்தனர். எனினும் நாளடைவில் அது ஒரு பேராறாகப் பெருகிற்று. இறை தூதர் அவர்கள் தங்களைப் பின்பற்றிய சிலரோடு மதீனாவுக்குக் குடிபெயர்ந்து, அங்கு உண்மையானதோர் இஸ்லாமிய அரசுக்கு அஸ்திவாரமிட்டார்கள். மதீனாவில் குடியேறிய சிறிது காலத்திலேயே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் உயரிய கோட்பாடுகளைக் கொண்ட மாதிரி இஸ்லாமிய அரசு ஒன்றினை நிறுவும் பணியில் ஈடுபட்டார்கள்.
நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்பன அவ்வரசின் அடிப்படைகளாக விளங்கின. அது போன்ற ஒரு சமூகத்தினை ஒரு சமூகத்தினை அராபியர் முன்னொரு போதும் கண்டதில்லை. சமூக ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்படுவதையும், நேர்மையான செல்வ பங்கீட்டையும், அச்சமூக உறுப்பினரிடையே நிலவிய சகோதரத்துவ உறவுகளையும், கட்டுப்பாடு, நோக்க ஐக்கியம் என்பவற்றையும் நேரடியாக கண்ட மக்கள் வியப்பிலாழ்ந்தனர். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவுவதிலும் பொது நன்மைக்காக உழைப்பதிலும் பேரார்வம் காட்டியதை அரபு மக்கள் கண்டனர். ஒருவரை மற்றவர் முற்றாக நம்பினார். நிதானம், தன்னடக்கம், பரஸ்பர நம்பிக்கை, நேர்மை எனும் உயர் பண்புகள் எங்கும் பரந்து காணப்பட்டன. முஸ்லிம் சமூகத்தில் அமைதியும் இணக்கமும் நிலவின.
இந்த சமூகத்திற்கும் அராபியர்கள் பிறந்து வளர்ந்த சமூகத்திற்குமிடையில் இருந்த வேறுபாட்டை அவர்கள் காணத் தவறவில்லை. அவர்களின் பழைய சமூகத்தில் ஒவ்வொருவரும் மற்றவரின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருந்தார். எல்லாத் தகராறுகளும் பலாத்காரத்தினாலேயே தீர்க்கப்பட்டன. ஒழுக்கம் பற்றிய மங்கலானதொரு கருத்து அவர்களிடையே நிலவியது. ஆனால் அது அம்மக்களின் வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பயன்படவில்லை. அச்சமூகத்தில் மலிந்து கிடந்த தீமைகளைத் தடுத்து நிறுத்த எதுவுமிருக்கவில்லை. மக்கள் பொய்யிலும் விபச்சாரத்திலும் உழன்றனர். வாக்க
Tags இஸ்லாம் நூல்கள் நேற்று, இன்று, நாளை!