Featured Posts
Home » நூல்கள் (page 155)

நூல்கள்

தொழுகையின் போது பேசக்கூடாது.

311– (ஆரம்ப காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீசீனியாவின் மன்னர்) நஜ்ஜாஸியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) ‘நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 1199. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) 312– (ஆரம்பக் காலத்தில்) நாங்கள் …

Read More »

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?

“விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்த்த் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்துமதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் என அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1000 -த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு …

Read More »

ருக்உவின் நிலையில்….

310– நான் எனது தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின் போது எனது இரு கைகளையும் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக் கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம் என்றார். புஹாரி-790: முஸ்அப் இப்னு ஸஃது (ரலி)

Read More »

குர்ஆன் வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றும் ஸூஃபிகள்

ஸூஃபியிஸம்: ஸூஃபிகளில் சிலர் இறைவனைப் பெண்ணாக வர்ணிக்கிறார்கள். உதாரணமாக ஸூஃபி இப்னுல் ஃபாரிஸ் என்பவர் தன்னுடைய ‘கஷ்ஃபுல் உஜூஹ்’ என்ற நூலில் இவ்வாறு வர்ணித்திருக்கிறார். (நவூதுபில்லாஹி மின்ஹா)

Read More »

அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியை நிர்மாணிப்பவருக்கு..

309– உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவு படுத்தியபோது நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள் என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபணை செய்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என்று நபி (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) கூறினார்கள். புகாரி-450: உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரலி)

Read More »

கல்லறை மீது பள்ளி கட்டக்கூடாது.

305– உம்மு ஹபீபா (ரலி)வும் உம்மு ஸலமா (ரலி)வும் தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்க தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் மிகவும் …

Read More »

கிப்லா மாற்றம் பற்றி….

302– நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது நீர் வானத்தை நோக்கி உமது முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம் (2:144) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். உடனே கஃபாவை முன்னோக்கி தொழலானார்கள். (யஹுதிகளிலுள்ள சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பி …

Read More »

மஸ்ஜிதுன் நபவி நிர்மாணம்!

301– நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவின் மேற்புறத்தில் வசித்த வந்த பனூ அம்ரு பின் அவ்ஃபு எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாட்கள் தங்கினார்கள். பின்னர் பனூநஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வருமாறு கூறினார்கள். (தங்கள்) வாள்களைத் தொங்க விட்டவர்களாக அவர்கள் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததும் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அமர்ந்திருந்ததும் அவர்களைச் சுற்றி பனூநஜ்ஜார் கூட்டத்தினர் நின்றதும் …

Read More »

பூமியின் கருவூலங்களுடைய சாவிகள்

300– நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்துக்) …

Read More »

பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

298-அபூதர் (ரலி) அறிவித்தார்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், ‘அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது” …

Read More »