Featured Posts

நூல்கள்

செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…

205- மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மம் வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இதன் தோலை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். இது செத்ததாயிற்றே! எனத் தோழர்கள் கூறியதும், இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1492: இப்னு அப்பாஸ் (ரலி)

Read More »

காற்றுப் பிரிந்தால் உளூசெய்க…

204- தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும்வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம் என்றார்கள். புகாரி-137: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)

Read More »

சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …

200- நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஒரு ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியைச் சாப்பிட்ட பின் உளூ செய்யாமலே தொழுதார்கள். புகாரி-207: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) 201- நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டு விட்டுத் தொழுதார்கள். உளூ செய்யவில்லை. புகாரி-208: அம்ர் பின் உமய்யா (ரலி) 202- நபி (ஸல்) அவர்கள் …

Read More »

சட்ட மாற்றத்திற்குப் பின்….

199- ஒருவர் தமது மனைவியின் (இரு கால், இரு கை,ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உடலுறவு கொள்வாராயின் அவர் மீது குளிப்புக் கடமையாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-291: அபூஹூரைரா (ரலி)

Read More »

உடலுறவுக்குப் பின் குளிப்பு அவசியம்….

சட்ட மாற்றத்திற்கு முன் 196- நபி (ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நாம் உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்? என்றார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்து விடுவீரானால், அல்லது இந்திரியம் வெளியாகாமலிருந்தால், அதற்காக நீர் உளூ செய்ய வேண்டும் என …

Read More »

மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…

195- (நபி (ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில்) கஃபத்துல்லாஹ்வின் கட்டுமானப்பணி நடக்கும் போது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) என் சகோதரரின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோள் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து கொண்டு வரலாமே, என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். …

Read More »

தனிமையில் நிர்வாணமாகக் குளித்தல் பற்றி…

194- இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் அல்லாஹ்வின் மீதாணையாக மூஸா விரை வீக்கமுடையவர் எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என இஸ்ரவேலர்கள் கூறிக் கொண்டார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தமது ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களுடைய ஆடையோடு அந்தக் கல் ஓடி விட்டது. உடனே …

Read More »

குளிக்கும்போது திரையிட்டு கொள்ளுதல்..

193- மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது யாரவர்? எனக் கேட்டார்கள். நான் அபூதாலிபின் மகள் உம்முஹானி என்றேன். உடனே உம்முஹானியே! வருக! எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் குளித்து முடித்தபின் ஒரே ஆடையைச் சுற்றிக் …

Read More »

ஸூஃபியிஸம் – குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

தகவல் மூலம்: www.islam-qa.com ‘ஸூஃபியிஸம்’ (Sufyism) என்ற சொல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது, நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலோ அல்லது தாபியீன்கள், தபஅ தாபியீன்கள் காலத்திலோ அல்லது கண்ணியத்திற்குரிய நாற்பெரும் இமாம்களின் காலத்திலோ இருந்ததில்லை. ‘ஸூஃபியிஸம்’ எங்கிருந்து இஸ்லாத்திற்கு வந்தது என்று ஆராய்ந்தவர்கள் இந்தப்பெயர் வந்ததற்கான இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர்.

Read More »

மாதவிடாயில் விடுபட்ட தொழுகையை…

192- ஒரு பெண் ஆயிஷா (ரலி)விடம் பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் தொழுவதால் மட்டும் போதுமானதா? (அல்லது விடுபட்ட தொழுகையையும் தொழ வேண்டுமா?) என்று கேட்டபோது நீ (காரிஜியாக்களின் பிறப்பிடமான) ஹரூர் என்னுமிடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். எங்களிடம் விடுபட்ட தொழுகையை தொழுமாறு ஏவமாட்டார்கள் – அத்தொழுகையை நாங்கள் தொழமாட்டோம் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். புகாரி-321: முஆதா …

Read More »