195- (நபி (ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில்) கஃபத்துல்லாஹ்வின் கட்டுமானப்பணி நடக்கும் போது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) என் சகோதரரின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோள் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து கொண்டு வரலாமே, என நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் வேட்டியை அவிழ்த்து அதைத் தமது தோள் மீது வைத்தார்கள். வைத்ததும் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்து விட்டார்கள். அதற்கு பின் நபி (ஸல்) அவர்கள் நிர்வாணமாக ஒரு போதும் காட்சியளிக்கவில்லை.
மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…
புகாரி-364: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)