Featured Posts

திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்

குகை தோழர்களின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-15]

அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது! ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்! சிலைகளை வழிபடுமாறு மக்களை நிர்பந்திப்பவன். அந்தப் பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. “நாங்களே ஒரு சிலையை வடித்து அதை நாமே …

Read More »

ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-14]

மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது. மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். “பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செளியுங்கள்” என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் …

Read More »

கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-13]

யூதர்கள் தவ்ராத் வேதத்தைப் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் சனிக்கிழமையில்  தொழில்செய்யக்கூடாது . கடற்கரையில் யூதர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். மீன் பிடிப்பதுதான் அவர்களது தொழில் சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். சனிக்கிழமை தினத்தில் பெரும் திரளான மீன்கள் நீரின்மேல் வந்து தலைகாட்டும். இதனால் சிலர் பொருளாதார மோகம் கொண்டனர். ஆண்டவன் கட்டளையை தந்திரம் மூலம் மீற முற்பட்டனர். வெள்ளி இரவு வலை போட்டு, …

Read More »

இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]

இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு …

Read More »

இப்றாஹிம் நபியும்… நான்கு பறவைகளும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-11]

இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. “பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது! இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள். “இப்றாஹீம்! நீ …

Read More »

“உஸைர் நபியும்… உயிர் பெற்ற கழுதையும்…” [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-10]

“ச்சீ-கழுதை” யாரையாவது பிடிக்காவிட்டால் இப்படித்தான் திட்டுவோம். கழுதை அதன் முட்டாள்தனத்தாலும் அதன் அசிங்கமான சப்தத்தினாலும் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது. ஆனால், நான் அற்புதமான ஒரு கழுதை பற்றி குர்ஆன் கூறும் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றேன். உஸைர் என்றொரு நபி இருந்தார். அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் சென்றார். அந்த ஊர் சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து போயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த …

Read More »

இப்றாஹீம் நபியும்… கொழுத்த காளைக் கன்றும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-9]

இப்றாஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவர் நற்பண்புகள் நிறைந்தவர். விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது அவரின் விஷேச பண்புகளில் ஒன்றாகும். ஒருநாள் அவரது வீட்டிற்கு இரண்டு விருந்தாளிகள் வந்து ஸலாம் கூறினர். இப்றாஹீம் நபியும் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார். வந்தவர்கள் யார், எவர்? என்ற எந்த அறிமுகமும் அற்றவர்கள். இருப்பினும் அவர்களை அன்பாக வரவேற்று இப்றாஹீம் நபி அவர்களை அரவணைத்தார். தான் வளர்த்து வந்த ஒரு கொழுத்த காளைக் …

Read More »

யூனுஸ் நபியும்… மீனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-8]

யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறிவிட்டார். ஒரு நபி தனது …

Read More »

சூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-7]

எகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூதர் என்றார். பிர்அவ்ன் ஆதாரத்தைக் கேட்ட போது மூஸா நபி தன் தடியைப் போட்டார். அது பெரிய பாம்பாக மாறியது. உடனே மூஸா நல்ல சூனியக்காரர். இது போன்ற சூனியத்தை எம்மாலும் செய்ய முடியும் என்றான் பிர்அவ்ன். அதன் பின் மூஸா நபிக்கும் அங்கிருந்த சூனியக்காரர்களுக்கும் …

Read More »

சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.” “நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)” “சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் …

Read More »