Featured Posts
Home » இஸ்லாம் (page 148)

இஸ்லாம்

[01] வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்

மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும் …

Read More »

அழைப்பு பணியின் அவசியம்

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக்கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும்பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும் தீமையை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும். மக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றில் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

Read More »

இஸ்லாமும் பாடல்களும்

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.

Read More »

பதிவிறக்கம்: தஃப்ஸீர் மற்றும் அரபி அணி இலக்கணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..), ஷேக் ரஹ்மத்துல்லா இம்தாதி அவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் குர்ஆனை புரிந்து படிப்பதற்கான வகுப்புக்குரிய பாடங்கள் அனைத்துப் பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தஃப்ஸீர் ஒரு பாடமாகவும், அரபி அணி இலக்கணம் (ஸர்ஃப்) ஒரு பாடமாகவும் இத்துடன் pdf கோப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகளை மற்றவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் கிடைக்கும்படி முயற்சி செய்யுங்கள்.

Read More »

பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (2)

கண்ணியத்திற்குரிய சகோதரர் PJ அவர்களுக்கு ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’ உங்களது தொடர்-2 ஐயும், ஸலபியின் மறுப்புக்கு மறுப்பையும் படித்த போது நீங்கள் உங்களுக்கு ஒரு நீதி, எனக்கொரு நீதி என்ற அடிப்படையில் எழுதியிருப்பதையும், என்னை இழிவுபடுத்துவதற்கும், உண்மைகளை மறுப்பதற்கும் பெரிதும் முயன்றிருக்கின்றீர்கள் என்பதையும் அறிந்து ஆச்சரியமடைந்தேன்.

Read More »

கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்

இஸ்லாமியச் சூழலில் பல்வகையான விவாதங்களும், உரையாடல்களும் அவசியமாகும். இந்த விவாதத்தில் ஈடுபடுபவர்கள் நேர்த்தியான குணப் பண்புகளோடு குறித்த விடயம் தொடர்பான வாதங்களை முன் வைத்தலே சிறந்ததும், ஆரோக்கியமானதுமாகும். தரமான விடயதானங்களை உள்ளடக்கிய செறிவான தகவல்களுடன் சிந்திக்கத் துணை செய்யக் கூடிய ஆழமான கூறுகளை நிதானத்துடன் ஒப்புவிப்பதன் மூலமாகத்தான் சிறந்த ஆய்வாளனாக முடியும். ஆனால், பீஜே என்பவர் சமீபத்தில் இஸ்மாயில் ஸலபி விடயம் தொடர்பாக அவர் வெளிக் கொணர்ந்த கருத்துக்களை நோக்குகின்ற …

Read More »

நினைவுத் திரும்பிய பி. ஜைனுல் ஆபீதீன்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)

Read More »

பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (1)

கண்ணியத்திற்குரிய அறிஞர் பீஜே அவர்கள் எனது ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடர் கட்டுரைக்குத் தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே பதிலளிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. சிலர் தமது இமேஜைப் பாதுகாக்கத் தமது மாணவர்களை விட்டே மறுப்பும், விவாதமும் செய்து வரும் இந்தக் காலத்தில், தானே பதிலளிக்க முன்வந்துள்ளமை வரவேற்கப்படவேண்டியதே!

Read More »

அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்!

அறிவுலகின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவ ஞானி என்றும் போற்றப்படும் ‘அரிஸ்டாடில்’ (Aristotle) (கி.மு. 384 – 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத்துளியில் ஒழிந்திருக்கும் ‘குட்டி மனிதன்’ தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’தான் மறைந்திருக்கின்றான் என்றும் கூறிவந்தனர். 17ம் நூற்றாண்டுவரை …

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 08)

சூனியம் – தொகுப்புரை நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பதற்காகச் சகோதரர் பீஜே முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை இது வரை பார்த்தோம். இந்தத் தொடரின் இறுதி அங்கமாக அவரது ஆக்கத்தின் முடிவு குறித்தும், நமது கட்டுரையின் தொகுப்புக் குறித்தும் இத்தொடரில் நோக்குவோம்.

Read More »