– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
குர்ஆன் இறங்கப்பட்ட மாதத்தில் குர்ஆனுடன் தொடர்புள்ளவர்களாக மாறுவதற்கு குர்ஆனை பற்றி சுருக்கமாக பின்வருமாறு அறிந்து கொள்வோம்.
– அல்குர்ஆன் எப்போது அருளப்பட்டது?
அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக வும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய தாகவும் நன்மை-தீமையை பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் அருளப் பெற்றது… (2:185).
– ரமழானில் எந்த இரவில் அருளப்பட்டது?
லைலதுல் கத்ர் இரவில் அருளப்பட்டது.
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்திய மாக, நிச்சயமாக நாம் இதனை மிக்க பாக்கி யமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம். (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். (44:1-3)
நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை லைலதுல் கத்ர் (மகத்துவம் மிக்க) இரவில் இறக்கி வைத்தோம்.
மகத்துவமிக்க இரவு என்றால் என்ன வென உமக்கு எப்படி தெரியும்?
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங் களை விடச் சிறந்தது.
வானவர்களும் (ஜிப்ரீல் ஆகிய பரிசுத்த) ஆவியும் தங்கள் இறைவனின் கட்டளைப் பிரகாரம் ஒவ்வொரு காரியத்துடன் இறங்கு கின்றனர். ஸலாம்-சாந்தி சமாதானம்- இது விடியற் காலை வரை இருக்கும். (97:1)
– அல்குர்ஆன் நபியவர்களுக்கு எப்படி வந்தது?
ஜீப்ரீல் (அலை) மூலம் குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எத்திவைக்கப்பட்டது.
நிச்சயமாக (ஜிப்ரீல் ஆகிய) அவர் அல் லாஹ்வின் கட்டளையின் பிரகாரமே உமது இதயத்தில் இதனை இறக்கி வைத்தார். (2:97).
ரூஹுல் அமீன் (என்னும் ஜிப்ரயீல்) இதனை உமது இருதயத்தில் இறக்கி வைத்தார். (26:193, 16:102, 53:5-8, 81:19-24).
– அல்குர்ஆன் எழுத்து வடிவில் இறங்கியதா?
அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் ஓசை வடிவில் அருளப்பட்டு கற்றுக் கொடுக்கப்பட்டது.
இது (குர்ஆன்) அவருக்கு (முஹம்மத் நபிக்கு) வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதே யன்றி வேறில்லை. (ஜிப்ரீல் என்னும்) பலசாலியே இதனை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார். (53:4-6).
(நபியே! ஜிப்ரீல் மூலம் ஓதிக் காண்பிக் கும்போது) நீர் அவசரப்பட்டு அதனை ஓத உம்முடைய நாவை அசைக்காதீர். ஏனென் றால் அதனை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும் படி செய்வது நம்மீதுள்ள கடமையாகும். (75:16-19).
– அல்குர்ஆன் எங்கே பதியப்பட்டிருந்தது?
அல்குர்ஆன் வானத்திலுள்ள லவ்ஹுல் மஹ்பூளில் பதியப்பட்டிருந்தது. அங்கிருந்து நபியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் அருளப்பட்டது.
நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்.
(லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) பாதுகாக்கப் பட்ட புத்தகத்தில் இருக்கிறது. (56:77-78)
இந்த கண்ணியமான குர்ஆன் லவ் ஹுல் மஹ்பூலில் பதிவு செய்யப்பட்டிருக்கி றது. (85: 21-22)
மிக்க கண்ணியமான நல்லோராகிய எழுதுவோர்களின் கைகளினால் (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) மிக்க கண்ணியமான ஏடுகளில் வரையப்பட்ட பரிசுத்தமான இ(வ்வேதமான)து மிக்க மேலான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. (80:13-16).
– ஷைத்தானால் அணுக முடியுமா?
நிச்சயமாக ஷைத்தானால் அணுக முடியாது.
(இந்தக் குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழு தப்பட்டுள்ளது. துய்மையான (வான)வர் களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள். (56:77-79).
– அல்குர்ஆன் மொத்தமாக அருளப்பட்டதா?
நிச்சயமாக இல்லை. நபிகளாரின் பிரச் சாரப் பணியில் சமூக உருவாக்கத்திற்கேற்ப சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப சிறிது சிறிதாக 23 வருடங்களாக நபியவர்களுக்கு அருளப்பட்டது.
மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு, இந்தக் குர்ஆ னைப் பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச் சிறுகவும் இறக்கி வைத்தோம். (17:106).
இந்தக் குர்ஆன் முழுவதும் (நபியாகிய) அவர் மீது ஒரே தடவையில் இறக்கப்பட்டி ருக்க வேண்டாமா? என்று நிராகரிக்கும் இவர்கள் கேட்கின்றனர். இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக (குர்ஆனை உமக்கு) இறக்கியதெல்லாம் உம் இருத யத்தைத் திடப்படுத்துவதற்காகவே! (25:32).
– அல்குர்ஆன் எந்த மொழியில் அருளப்பட்டது?
அல்குர்ஆன் எந்த சமுதாயத்திற்கு அருளப்பட்டதோ அந்த சமுதாயம் பேசிய அறபு மொழியில்தான் அருளப்பட்டது.
நீங்கள் நன்கறிந்து கொள்ளும் பொரு ட்டு அறபு மொழியில் இக்குர்ஆனை நிச்சயமாக நாம் அருளினோம். (12:2)
ஒரு மனிதர் தான் (முஹம்மத் நபியாகிய) இவருக்கு (இவ்வேதத்தை) கற்றுக் கொடுக்கிறார் என்று இவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவர் கற்றுக் கொடுப்பதாக இவர்கள் கூறுகிறார்களோ அவருடைய மொழியோ அரபு அல்லாத வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அறபு மொழியில் உள்ளது. (16:103).
– அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்கள் மாற்றியமைத்ததுண்டா?
அல்லாஹ்வினால் அருளப்பட்ட பிரகா ரமே குர்ஆனை எத்திவைத்தார்களே தவிர அதில் ஒரு எழுத்தைக் கூட நபியவர்கள் மாற்றிவிடவில்லை.
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் ”இது அல்லாத வேறு குர்ஆனை கொண்டு வருவீ ராக அல்லது இதை மாற்றியமைப்பீராக” என்று நமது (மறுமை) சந்திப்பை நம்பா தோர் கூறுகின்றனர்.
நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறி விக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்துவிட்டால் மகத்தான (மறுமை) நாளின் வேதனையை அஞ்சுகிறேன் என நபியே கூறுவீராக (10:15).
– அல்குர்ஆன் முழுமை படுத்தாமல் விடப்பட்டதா?
இல்லை, அல்குர்ஆன் முழுமைபடுத்தப் பட்டதால்தான் இஸ்லாமிய மார்க்கமும் முழுமைப்படுத்தப்பட்டது.
நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரண மாக்கி வைத்துவிட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடைகளையும் பூர்த்தி யாக்கி விட்டேன். இஸ்லாததை உங்களுக் கான மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன் (5:3).
– அல்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் உரிமை நபிகளாருக்கு வழங்கப்பட்டதா?
ஆம், ”மக்களுக்கு அருளப்பட்டதை அவர்களுக்கு நீர் விளக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சிந்திக்க வேண் டும் என்பதற்காகவும் இந்த வேதத்தை நபியே நாம் உம்மீது இறக்கிவைத்தோம்” (16:44).
– அல்குர்ஆன் இறைவேதம் என உறுதிப்படுத்துவது எப்படி?
குர்ஆனைப் போன்ற ஒரு வேதத்தை எவராலும் உருவாக்க முடியாது என்று அல்லாஹ் சவால் விடுவதே குர்ஆன் இறைவேதம் என்பதற்கு சிறியதொரு சான்றாகும்.
நமது அடியாருக்கு (முஹம்மத் நபிக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில்) நீங்கள் உண்மையாளர் களாகவும் இருந்தால் இதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள் ளுங்கள். (2:23)
நீங்கள் (அவ்விதம்) செய்யாவிட்டால் ஒருபோதும் செய்யவே முடியாது. நரக நெருப்புக்கு அஞ்சுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட்கள். (2:24).
இதனை (இக்குர்ஆனை நம்முடைய தூதராகிய) அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறு கின்றனரா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதுபோன்ற ஓர் அத்தியா யத்தையேனும் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்ற வர்களை துணைக்கு அழைத்துக் கொள் ளுங்கள் என்று நபியே கூறுவீராக. (10:38)
(நம்முடைய தூதராகிய) இவர் இதை பொய்யாக கற்பனை செய்து கொண்டா ரென அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக் கட்டி பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள். அல்லாஹ் வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை அழைத்துக் கொள்ளுங்கள் என்று நபியே கூறுவீராக.
உங்களுக்கு அவர்கள் பதிலளிக்காவிட் டால் நிச்சயமாக அல்லாஹ்வின் ஞானத்து டன் இது அருளப்படது என்பதையும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கட்டுப்படுகிறீர்களா? (11:13,14)
இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று திரண்டாலும் இதுபோன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இரு ந்தாலும் சரியே என்று நபியே கூறுவீராக! (17:88).
– அல்குர்ஆனுக்கும் முன்னைய நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட வேதங்களுக்கும் என்ன தொடர்பு?
முஹம்மது நபிக்கு முன்பு வந்த நபி மார்களுக்கும் அல்லாஹ்வினால் வேதங்கள் அருளப்பட்டதென்று நம்ப வேண்டும் என்றும் முஸ்லம்களுக்கு கட்டளையிடப் பட்டுள்ளது. ஆனால், அந்த வேதங்களை பின்பற்ற வேண்டும் என்று ஏவப்படவில்லை. அல்குர்ஆன் அவ்வேதங்களை உண்மைப் படுத்துவதுடன் அந்த வேதங்களில் கையா ளப்பட்ட தவறுகளையும் சுட்டிக் காட்டு கிறது.
அல்லாஹ் அருளிய (இந்த வேதத்தை) நம்புங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம் என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும் அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
வேண்டும் என்று ஏவப்படவில்லை. அல் குர்ஆன் அவ்வேதங்களை உண்மைப்படுத்துவதுடன் அந்த வேதங்களில் கையாளப்பட்ட தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறது.
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்? என்று நபியே கேட்பீராக! (2:91).
– அல்குர்ஆனில் தவறுகள் ஏற்பட இடமுண்டா?
எக்காலத்திலும் தவறுகள் ஏற்பட வாய்ப்பேயில்லை.
இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞான மிக்கோனிட மிருந்து (இக்குர்ஆன்) அருளப்பட்டது. (41:42)
– அல்குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பு யாருக்குரியது?
அல்லாஹ்வே அப்பொறுப்பை ஏற்றி ருக்கிறான். ”நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப் போம்.” (15:9)
– அல்குர்ஆன் படித்து விளங்குவதற்கு எளிதானதா?
அனைத்து மக்களுக்கும் நேர்வழியை காட்டும் பொருட்டு மிக இலகு நடையில் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டி ருப்பார்கள். (4:82).
இக்குர்ஆனை விளங்குவதற்கு எளி தாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (54:22)
அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24).
– அல்குர்ஆனை ஓதாது விட்டால் படிக்காது விட்டால் என்ன நடக்கும்?
அல்குர்ஆனை ஓதாது படிக்காது விட்டால் அதன் படி நடக்காது விட்டால் மறுமையில் தண்டனை கிடைக்கும்.
எனது போதனையை புறக்கணிப்பவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கை உண்டு.அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். என் இரட்சகா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே. ஏன் என்னை குருடனாக எழுப்பினாய்?என்று அவன் கேட்பான்.
அப்படித் தானட நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன.அதை நீ மறந்தவாறே இன்று நீ மறக்கப்படுகிறாய் என்று (அல்லாஹ்) கூறுவான். (20:124-126)
– அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமுரியதா?
இல்லை. முழு மனித சமூகத்திற்கு முரியது.
இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை என்று நபியே கூறுவீராக. (81:25-29 2:185 25:1 14:1).
– அல்குர்அனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு?
114 அத்தியாயங்கள் உண்டு.
As salam o alaikkum (var)
very useful and informative…… drop such a article regularly.
thank u
Masha allah…Shukran jazaakallahu hayir.
Allhamdullah it is very very wonderful information,making All human being to be strong in Takwa,
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா புகழும் இறைவனுகே மாஷா அல்லாஹ்
alhamdulillah,its really useful and understandable information,and keep it up long ever. anaithu puhalum irraivanukkae.vassalam.
jazakkumullah hair best information,
assalamu allaikum
very useful and informative…… drop such a article regularly.This article is very useful to learn Islam… allavu ku thanks.
masalam