Featured Posts
Home » 2006 (page 24)

Yearly Archives: 2006

லாஇலாஹ இல்லல்லாஹ்!

119- அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று (இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைச் செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் …

Read More »

1.இஸ்லாமியப் போர்கள் ஓர் விளக்கம்

மக்கத்துக் காஃபிர்களா..? பக்கத்துக் காஃபிர்களா..? இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிப்பவர்கள் திருக்குர்ஆன் 2:191 வசனத்தில் ”அவர்களைக் கொல்லுங்கள்” என்ற வாசகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ”முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும்” கொன்று விடும்படி திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது என்று தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த அவதூறுப் பிரச்சாரம் இந்தியாவிலும் உலக அளவிலும் அரங்கேற்றப்படுகின்கிறது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் கவரப்பட்டு விடக்கூடாது, இஸ்லாத்தை விஷமென வெறுக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு …

Read More »

நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர…

118- அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் (அதிபயங்கரமான)இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாராவது) நாம் கேட்டுக் கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான)ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன் (தன்னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும் தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட ,அவர்கள் உங்களுக்குச் …

Read More »

குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி

117- நபி (ஸல்) அவர்கள் (சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின் வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் அது நிரம்பியதைப் போன்று அவருக்குத் தோன்றும் உடனே அவர் திரும்பி …

Read More »

நரகவாசிகளின் மீது அல்லாஹ்வின் கருணை

116- (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள். -இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார்- அவ்வாறு அவர்கள் இந்த ஆற்றில் போடப்பட்டதும் பெறும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் …

Read More »

மாஉல் ஹயாத்! (ஜீவ நீர்)

115- நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் (மேக மூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள் என்று கூறிவிட்டு …

Read More »

மறுமையில் அல்லாஹ்வை காண்பது பற்றி..

113- மேலும் இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும், தங்கத்தினால் ஆனவை. அத்ன் எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள பெருமை எனும் மேலாடை தவிர வேறெந்த தடையும் இராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 4880: அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூ மூசா அல் …

Read More »

இறைவனை நேரில் பார்த்தார்களா?

112- முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்துவிட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை, அவர்களுடைய (அசல்) உருவிலும் (அசல் படைப்பின்) அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைந்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள். புகாரி-3234: ஆயிஷா(ரலி)

Read More »

மூன்று விஷயங்கள் பற்றிய உண்மைகள்

111- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது நேரில் பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) …

Read More »