Featured Posts
Home » 2006 » April » 29

Daily Archives: April 29, 2006

நல்லறங்களில் மிகச் சிறந்தது..

அல்லாஹ்வின் மீது விசவாசங்கொள்வது நல்லறங்களில் மிகச் சிறந்தது.. 50- செயல்களில் சிறந்தது எது?என நபி(ஸல்)அவர்களிடம் வினவப்பட்டது. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைக் கொள்வது என்றார்கள். பின்னர் எது? என வினவப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது என்றார்கள். பின்னர் எது? என்று கேட்கப்பட்டது ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்றார்கள். புகாரி: 26 அபுஹூரைரா (ரலி) 51- நான் நபி(ஸல்)அவர்களிடம் எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் …

Read More »

விசுவாசத்தில் குறைவு இருப்பது குறித்து..

மார்க்க விசுவாசத்தில், கடமைகளில் குறைவு இருப்பது குறித்து.. 49- ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்றபோது பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள் தாம் என எனக்குக் காட்டப்பட்டது என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன? என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாகச் …

Read More »

அன்சாரிகளை நேசிப்பது குறித்து..

அன்சாரிகளை(மதீனத்து நபித்தோழர்களை)நேசிப்பது ஈமானின் அங்கம்.. 47- ஈமானின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-17: அனஸ்(ரலி) 48- இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள். அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-3783: …

Read More »

நட்சத்திரத்தால் மழையா?

இந்த நட்சத்திரத்தால் மழை பெற்றோம் என்று கூறுபவர் பற்றி.. 46- நபி(ஸல்) அவர்கள் ஹூதைபிய்யா என்னுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்து மக்களை நோக்கி உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு …

Read More »

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து.. 43- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரலி) கூறியதாவது: ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம், அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும். புகாரி 48 :அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி). ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு நிராகரிப்போராகாதீர்.. 44- நபி(ஸல்)அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் மக்களை அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக! என்று …

Read More »