Featured Posts
Home » 2007 (page 49)

Yearly Archives: 2007

ஜும்ஆ ஸுபுஹ் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?

504. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர். புஹாரி: 891 அபூஹூரைரா (ரலி)

Read More »

இமாமின் குத்பா நடந்துகொண்டிருந்தாலும் 2 ரக்அத் தொழுதல்

502. ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து இரு ரக்அத்துகள் தொழுவீராக!” என்று கூறினார்கள். புஹாரி :930 ஜாபிர் (ரலி) 503. ”உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்தும்போது வந்தால் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்’ என்று தம் சொற்பொழிவின்போது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். …

Read More »

குர்ஆனிய வசனம் 62:11 இறங்கியதின் பின்னணி

500. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றி, ஒட்டகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், ‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்” (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் …

Read More »

ஜூம்ஆவில் இரு குத்பாக்கள்..

499. நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர். புஹாரி :920- இப்னு உமர் (ரலி)

Read More »

ஜூம்ஆவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்..

495. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். புஹாரி :935 அபூஹூரைரா (ரலி) 496. (உலகில்) இறுதிச் சமுதாயமான …

Read More »

ஜூம்ஆ குத்பாவை அமைதியாக கேட்டல்..

494. ”இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 934 அபூஹுரைரா (ரலி)

Read More »

இசையும் இசைக் கருவிகளும்

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம்செய்வதற்காகவும் தான்” (31:6). இவ்வசனத்திலுள்ள மனமயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி)அவர்கள் கூறியுள்ளார்கள். ‘விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் என்னுடைய சமுதாயத்தில் நிச்சயம் …

Read More »

பொய் சாட்சி சொல்லுதல்

அல்லாஹ் கூறுகிறான்: “எனவே விக்கிரகங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்தும் விலகியிருங்கள். அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காது, அவனுக்கே ஒருமனப்பட்டவர்களாய்த் திகழுங்கள்” (22:30,31) அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது …

Read More »

தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள்

தற்காலத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்களை விற்பனை செய்யும் கடைகளில் எந்தக் கடையிலும் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் அல்லது தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் இல்லாமலில்லை. அவ்வாறே செல்வந்தர்களுடைய வீடுகளும், பல ஹோட்டல்களும், இன்னும் சொல்வதானால் இந்த தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிலர், சிலருக்கு வழங்கும் உயர்ந்த அன்பளிப்புப் பொருள்களாகவும் ஆகி விட்டன. இன்னும் சிலர் தங்களுடைய வீடுகளில் அவற்றை வைத்துக் கொள்வதில்லை. ஆயினும் மற்றவர்களுடைய வீடுகளிலும் …

Read More »

ஸஃபிய்யாவின் திருமணமும், மனநோயாளியின் விமர்சனமும்.

மதீனாவிலிருந்து ஷாம் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 170 கீ.மீ தொலைவிலுள்ள ஒரு நகரத்தின் பெயர் தான் கைபர். இங்கு யூதர்கள் வசித்து வந்தனர். இவர்கள், மதீனா நகர்ப்புற யூதர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர். மதீனா மீது போர் தொடுக்கவும், முஸ்லிம்களைத் தாக்கவும் மக்கா இணைவைப்பாளர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளும் செய்து வந்தனர். மதீனா புறநகர்ப் பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘பனூ நளீர்’ …

Read More »