Featured Posts

Daily Archives: August 18, 2007

அரஃபா நாளில் தல்பியா கூறுதல்.

806. நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘தல்பியா கூறியவர்கள் தல்பியா கூறினர்; அது ஆட்சேபிக்கப்படவில்லை தக்பீர் கூறியவர் தக்பீர் கூறினர்; அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை’ என்று விடையளித்தார்கள். புஹாரி :970 முஹம்மது பின் அபூபக்கர் அத்தகபீ (ரலி).

Read More »