Featured Posts
Home » 2007 » August » 14

Daily Archives: August 14, 2007

தவாஃபின் போது கறுப்புக் கல்லை முத்தமிடுதல்.

799. உமர் (ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ‘நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்’ என்றார். புஹாரி :1597 அபீஸ் பின் ரபிஆ (ரலி).

Read More »

இறைநம்பிக்கை அறிவுப்பூர்வமானதா?

மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் ‘கடவுள் உண்டா?” என்பதேயாகும்! வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கும்வரை கடவுளைப் பற்றியக் கேள்வி எழுந்திருக்காது! அனேகமாக மனித சக்திக்கு மீறிய நிகழ்வுகளின் போதுதான், தனக்கு மிஞ்சிய சக்தி பற்றிய ஐயம் எழுந்திருக்கவேண்டும். பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதனை “இயற்கையின் நிகழ்தகவு” என்றும் அறிவியலாளர்கள் “வினை அல்லது எதிர்வினை” என்றும் இறை நம்பிக்கையாளார்கள் “எல்லாம் அவன் செயல்” …

Read More »

கஃபாவின் இருமூலைகளைத் தொட்டு முத்தமிடுதல் பற்றி..

797. ”நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதை விட்டதில்லை.” புஹாரி: 1606 இப்னு உமர் (ரலி). 798. ”கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (முத்தமிடாமல்) தவிர்க்க முடியும்? முஆவியா (ரலி) எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள்” என்று அபூ ஷஅஸா கூறினார். முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் …

Read More »