Featured Posts
Home » 2009 » August » 06

Daily Archives: August 6, 2009

[07] ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸுப்ஹுடைய) பாங்கிற்கும் ஸஹர் உணவிற்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ் (ரலி) அவர்கள் கேட்டதற்கு, ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »

[06] ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு

1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றவரல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் ஒரு அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி …

Read More »

[05] சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது

ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »

[04] பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »