– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
நீண்ட நேரம் குர்ஆன் ஓதித் தொழுவதற்காக குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு.
அதிகம் மனப்பாடம் இல்லாதவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி(ச) அவர்கள் சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு தொழுகை நடாத்தியுள்ளார்கள். ஆயிஷா(ரழி) அவர்களின் அடிமை ஒருவர் குர்ஆனைப் பார்த்து ஓதி அன்னையவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள். (புஹாரி)
எனவே, குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்குத் தடை இல்லை. இருப்பினும் முன்னால் பெரிய முஸ்ஹபை வைத்து அதைப் பார்த்துத் தொழ முடியுமாக இருந்தால் தக்பீரைப் பேணுவதில் குழப்பம் இருக்காது. கையில் குர்ஆனை வைத்து அதைப் பார்ப்பதிலும், தாள்களைப் புரட்டுவதிலும் கவனம் சிதறுவதை விட மனனமான சூறாக்களை ஓதித் தொழுவது சிறந்ததாகும்.