அல் ஜாமிஉ:
இஸ்லாம் தொடர்பான எல்லா விஷயங்களும் அதாவது, கொள்கை வழிபாடு, சட்டம், வரலாறு, ஒழுக்கம், தஃப்ஸீர் (வேத விளக்கம்), குழப்பங்கள், போர்கள், சான்றோர் சிறப்புகள், இறுதி நாளின் அடையாளங்கள் போன்ற எல்லா வகையான ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ள நூல்.
எடுத்துக்காட்டாக, ஜாமிஉ ஸஹீஹுல் புகாரி, ஜாமிஉத் திர்மிதி
அஸ்-ஸிஹாஹ்:
ஒப்புக்கொள்ளப்பட்ட, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள்.
உதாரணமாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்
அஸ் ஸுனன்:
ஃபிக்ஹ் சட்டங்கள் தொடர்பான ஹதீஸ்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள்.
எடுத்துக்காட்டாக, ஸுனன் அபீ தாவூத், ஸுனன் நஸாஈ
அல்முஸ்னத்:
ஸஹாபிகளின் நபிமொழி அறிவிப்புகள் அனைத்தும் அவரவரின் பெயரில் வரிசையாய்த் தொகுக்கப்பட்டுள்ள – அல்லது பிரபலமான ஓர் இமாமின் அறிவிப்புகள் அனைத்தையும் திரட்டப்பட்ட நூல்.
எடுத்துக்காட்டாக, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் முஸ்னத்
அல்முஃஜம்:
அறிவிப்பாளர்களின் பெயர்கள் அல்லது ஷைகுகளின் பெயர்களை அனுசரித்து அரபி எழுத்துக்களின் வரிசைப்படி ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட நூல்கள்.
எடுத்துக்காட்டாக, தபரானியின் முஃஜமுஸ் ஸஃகீர், முஃஜமுல் கபீர்
அல் ஜுஸ்வு:
குறிப்பிட்டதொரு ஃபிக்ஹ் சட்டம் தொடர்பான ஹதீஸ்கள் ஒன்று திரட்டப்பட்ட நூல்.
எடுத்துக்காட்டாக, இமாம் புகாரி அவர்களின் ஜுஸ்வு ரஃப்இல் யதைன்
– தொழுகையில் ருகூவுக்குப் பிறகு கைகளை உயர்த்துதல்
நன்றி: உனைஸா தாஃவா சென்டர் – சவூதி அரேபியா