-இம்தியாஸ் யூசுப் ஸலபி-
இஸ்லாமிய வரலாற்றில் சிரியா முக்கிய இடத்தை வகிக்கின்றது. மக்கா மதீனா பலஸ்தீனுக்குப் பின் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க தேசம் சிரியாவாகும். சஹாபாக்கள் அதிகம் சென்ற பகுதியும் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் அதிகம் உரு வான பகுதியும் சிரியாதான். முஆவியா (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் சுமார் 20 வருடங்கள் இஸ்லாமிய தலைநகரமாகவும் செயற்பட்டு வந்தது. ஈஸா நபியின் மீள் வருகையும் சிரியாவின் திமிஷ்க் பகுதியில் தான் நடைப் பெறப் போகின்றது.
வரலாற்றின் ஓடத்தில் சிரியா பிரான்ஸின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானபின் 1960ல் சிரியா சுதந்திரம் அடைந்ததும் ‘ஹாபிழ் ஆஸாத் என்பவர் பாத் சோசலிஸ கட்சியை நிறுவி ஆட்சிக்கு வந்து சுமார் 30 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சி நடாத்தினார். அன்றிருந்த சூழலில் மக்கள் இவருக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஜனனாயக அடிப்படையில் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டா லும் காலப்போக்கில் ஜனனாயகம் தூக்கி எறியப்பட்டு சர்வதிகார ஆட்சியாக மாற்றப்பட்டது. மக்கள் கடுமையாக கொடுமைகளுக்கு முகம் கொடுத்தார்கள். இவரது ஆட்சியை எதிர்த்த சுமார் 40,000 இக்வான்கள் படுகொலை செயயப்பட்டார்கள்.
இந்நிலையில் அவருடைய மகன் பஷார் அல் ஆஸாத் 2000ம் ஆண்டில் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தார். தந்தையுடை பாதையில் சர்வதிகாரியாக செயற்பட்டு நுசைரியா எனும் ஷீஆ பிரிவை முதன்மைப்படுத்தி நுசைரியாக்களுக்கு அரசாங்கத்தின் சகல துறைகளிலும் முன்னுரிமை கொடுத்து அதிகாரங்கள் பதவிகள் வழங்கி ஆட்சி செய்தார்.
நுசைரிய்யா என்பது அலி (ரலி) அவர்களை கடவுளாக ஏற்பது என்ற கொள்கையாகும். இக் கொள்கைக்கு மாற்றமாக உள்ளவர்கள் தான் சுன்னி முஸ்லிம்களாவர். எனவே ஷீஆ கொள்கை இல்லாதவர்களை (முஸ்லிம் என்ற பெயரில் உள்ள அனைவரையும்) விரோதிகளாகவும் எதிராகவும் இவர்கள் கருதினர்.
இவருடைய ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தான் “சிரியா சுதந்திர குழு என்று ஒரு குழு உருவானது. அதன் பின் ஜபஅதுன் நுஸ்ரா- என்ற குழுவும் உருவாகி போராட்டத்தில் குதித்தது. அரபுலகில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத் துடன் சிரியாவில் ஏற்கனவே போராடி வந்த இக்குழுக்களின் போராட்டமும் வலுவடைந்தது.
தன்னுடைய ஆட்சியை என்ன விலை கொடுத்தாவது எத்தனை இலட்சம் மக்களை பலிகொடுத்தாவது தக்கவைத்துக் கொள்ள ஆஸாத் அதிகாரத்தை பயன்படுத்தினார். உலகில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் அனைத்தையும் பயன் படுத்தி சுன்னி முஸ்லிம்களை கொல்ல துவங்கினார். அட்டகாசங்கள் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போயின.
ரஷ்யாவினதும் ஈரானினதும் உதவிகளைப் பெற்று முஸ்லிம்களை கொல்வது அல்லது அழிப்பது என்ற வெறியில் இயங்கி வருகிறான். முஸ்லிம்களுடைய இரத்தத்தை ஓட்டு வது அவர்களுடைய சொத்துக்களை பறிப்பது ஆகுமானது என்ற ஷீஆவின் கொள்கையை நடைமுறைப்படுத்த ஈரானுக்கும் சிரியாவுக்கும் நல்லதொரு வாய்ப்பாக இது அமைந்தது. ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்கள் (சிவி லியன்கள்) இலட்சக்கணக்கில் கருவறுக்கப்ட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அகதி மக்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கை தாண்டியுள்ளது. ஐரோப்பா நாடுகளுக்கு மக்கள் அகதிகளாக போயக் கொண்டிருக்கின்றனர்.
அகதிகளாக வரும் முஸ்லிம்களை ஏற்பதில்லை என்று ஐரோப்பா நாடுகள் கடுமையாக நடந்து கொண்டதனால் இலட்சக்கணக்கான மக்கள் பசி பட்டினியால் செத்துமடிந்தது மட்டுமல்லாமல் கடல்களிலும் தத்தளித்து மரணித்தார்கள். முஸ்லிம்களுடைய உடல்கள்-மையத்துக்கள் கடலில் மிதங்கத் தொடங்கின. ஒரு பச்சிலம் பாலகனின் உடல் கடற்கரையில் ஒதுங்கிய கொடூரத்தை கண்ட பின்பு தான் ஐரோப்பா நாடுகள் அகதிகளுக்கான தடைகளை அகற்றி சிரியா மக்களை ஏற்றுக் கொள்வது என முடிவு செய்தன. கடந்த நான்கு வருடங்களாக நடந்து வரும் இப்படுகொலைகள் மூலம் சிரியாவில் முஸ்லிம் என்ற இனம் இருக்கக் கூடாது என்ற வெறியில் ஆஸாத் செயற்பட்டு வருகின்றான்.
2009-09-28ம் திகதி நியூயார்க்-கிலே நடைபெற்ற ஐக்கியநாடுகள் கூட்டத்திலே பேசிய ரவ்ஹானி பஷ்ஷாரின் ஆட்சி தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் வரக்கூடாது. அவரது ஆட்சி நீடிப்பதுதான் தீவிரவாதிகளுக்கெதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அணுகூலமாக இருக்கும் என தெளிவாக தெரிவித்தார்.
சிரியாவுக்கெதிராக எந்த தடையும் ஐ. நா.-வில் வந்து விடாமல் இருக்க ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சிரியாவுக்கு முழுமையான ஆதரவை தெரிவித்து லாபமிட்டு வருகின்றது. பயங்கரவதத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையில் இராக் மக்கள் அழிக்கப்பட்டது போல் ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரியா முஸ்லிம்களை அழிக்க துவங்கியுள்ளது.
இப் போராட்டம் பலவருடங்கள் நடந்தாலும் முஸ்லிம்களை முழுமையாக துடைத்தெறிய முடியாது. சத்தியத்திற்கான போராட்டம் நடந்து கொண்டி ருக்கும் போது தான் ஈஸா (அலை) அவர்கள் சிரியாவின் திமிஷ்க் பகுதியிலுள்ள பள்ளியின் வெள்ளை மினாராவில் வந்து இறங்குவார்கள் என்பது நபி மொழியாகும்.
யாஅல்லாஹ் சிரியா மக்களின் போராட்டத்தில் பலத்தைக் கொடுத்து அவர்களது பாதங்களை உறுதிப்படுத்தி உன் விரோதிகளின் சதிகளை முறியடித்து விடு. சிரியா மக்களின் வாழ்வில் அமைதியையும் நிம்மதியையும் உன் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் ஈமானிய உறுதியையும் வழங்கிடு. மரணித்துப் போன மக்களின் பாவங்களை மன்னித்து அவர்களை உன் கருணையினால் அனைத்துக் கொள் மேலான சுவனத்தில் சேர்த் தருள். நீயே மன்னிப்பவன் அருள் புரிபவன்.