Featured Posts

[INDEX] மின்ஹாஜுல் முஸ்லிம்: அகீதா – அடிப்படைக்கொள்கை

minhaajulmuslimஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்பிற்கினிய இஸ்லாம்கல்வி.காம் இணையத்தள வாசக நேயர்களே, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடம் ஏராளமான பிரிவுகளும் (கொள்கையின் பெயரால்) பித்னாகளும் நிலவுவதை கண்கூடா காண முடிகின்றது. தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரம் வீரியமாக தொடங்கிய நிலையில் குறுகிய காலத்திற்குள்ளகவே இவ்வளவு ஃபித்னாக்கள் ஏற்படக் காரணம் என்ன? அதுவும் இந்த கொள்கையை போதிக்க கூடியவர்கள் மத்தியில் – என்ற வியப்பு எல்லோருடைய உள்ளத்தில் இருக்கும் ஒரு கேள்விதான். இதனை நேர்மையான பல அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்தபோது பல உண்மைகள் வெளிப்பட்டன, அதில் முக்கியமானவைகள்

1. தஃவா களத்தில் இருக்கக் கூடிய அதிகமானவர்களுக்கு ‘இல்ம்’ குறைவாக அல்லது அதில் பூர்ணமடையாமல் இருப்பது.
2. சிறந்த நேர்மையான அறிஞர்கள் நடத்தும் வகுப்புகளில் கலந்துக் கொள்ளாமல் இருப்பதுடன் புறக்கணிப்பது
3. தஃவா களத்தில் இறங்கி தீவிர வேலை செய்துவிட்டு பின் இல்ம் தேடி புத்தகங்களை வாசிக்க தொடங்கும் போது புத்தகமே தவறாக தோன்றுவது
4. அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் நூல்களின் மொழிபெயர்ப்புகளை வாசிப்பதை விட தான் சார்ந்து இருக்கும் இயக்க (கொள்கைகளின்) சஞ்சிகைகளை வாசிப்பது.
5. குர்ஆன் ஸுன்னாவை போதிப்பதைவிட தான் சார்ந்துள்ள இயக்க கொள்கைகளை பரப்புரை செய்வதும் மாற்று கருத்துடையவர்களின் கருத்துகளை போதனைகளை புறக்கணிப்பதும்

இன்னும் ஏராளமான விடயங்கள் இருந்த போதும் இதுவே மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இந்த போக்கு நீடிக்குமானால் எதிர்கால சந்ததியினர் எது ஏகத்துவம் எது குர்ஆன் ஸுன்னா வழி என்பதை அடையாளம் காண்பதில் தவறிழைக்ககூடிய நிலை ஏற்படும். எனவே இதனை தவிர்ப்பதற்காக அறிஞர் பெருமக்கள் கண்ட மாற்றுமுறை தான் “வேர்களை தேடி” என்ற ரீதியில் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை (அகீதா-வை) மிக வீரியத்துடன் வகுப்புகளாக நடத்துவதும் அதே போன்று ஒழுக்கப் பயிற்சி பட்டறைகள் (தர்பிய்யாகள்) நடத்துவதும்தான் தீர்வாகும்.

இந்த தொடரில் சவூதி அரபியாவின் பல்வேறு பிரதேசங்களில் பல மார்க்க வகுப்புகள் (தவ்றாகள்) நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு சிறு முயற்சியாக கிழக்கு மாகாணத்தில் தம்மாம் அருகிலுள்ள ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் அழைப்பாளர் மரியாதைக்குரிய மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் பல்வேறு தலைப்புளில் அகீதா சம்மந்தமான தவ்றாக்கள் நடத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக அல்-ஜுபைல் தஃவா நிலையத்தின் ஊடாக ‘மின்ஹாஜுல் முஸ்லிம்’ (منهاج المسلم) என்ற தவ்றாவை கடந்து 10 மாதங்களாக 17 தொடர்களை நடத்தி முடிந்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ் (இன்ஷா அல்லாஹ் அதனை தொடர்ச்சியாக நாம் வெளியிட இருக்கின்றோம்.)

இந்த தவ்றாவிற்கு நமது ஆசிரியர் மவ்லவி முஜாஹித் அவர்கள் அல்ஜிரியாவை சார்ந்த அஷ்ஷைக் அபூபக்கர் ஜாபர் அல்-ஜஸாயிர் அவர்கள் எழுதிய மின்ஹாஜுல் முஸ்லிம் என்ற நூலை தேர்வு செய்துள்ளார். (அஷ்ஷைக் அபூபக்கர் ஜாபர் அல்-ஜஸாயிர் அவர்கள் பிரபல்யமான அறிஞர்கள் வரிசையில் உள்ளார். அதேபோன்று தனது தள்ளாத வயதிலும் மதீனத்துப்பள்ளியில் (மதீனா முனவ்வரா – மதீனத்து நபவிய்யா) தொடர்ந்து தவ்றாகள் நடாத்தக்கூடியவர்களாக இருந்தார்.)

இந்த நூல் 5 பிரதான பகுதிகளையும் ஒவ்வொரு பிரதான பகுதியிலும் பல துணை தலைப்புகளின் மூலம் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை குர்ஆன் ஸுன்னா ஆதாரங்களின் அடிப்படையிலும் சிந்தனை ரீதியான ஆதாரங்கள் அடிப்படையிலும் விளக்குகின்றார்.

இதனுடைய ஸரஃக், ஆசிரியர் அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். இந்த அனைத்து தொடர்களையும் பார்ப்பதுடன் குடும்பத்தின் அங்கத்தினரையும் பார்க்கவும், கேட்கவும் செய்து. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை தெளிவாக அறிந்து அதனை செயல் வடிவில் கொண்டுவந்து ஈரூலகிலும் வெற்றிபெறுவோமாக என்ற பிரார்த்தனைகளுடன்…

குறிப்பு: இந்த நூல் தமிழ் மொழியில் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தாருஸ் ஸலாம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

منهاج المسلم மின்ஹாஜுல் முஸ்லிம் நூலின் உள்ளடக்கம்

العقيدة அகீதா – அடிப்படைக்கொள்கை
الآداب ஆதாப் – ஒழுக்கங்கள்
الأخلاق அக்லாக் – நற்பண்புகள்
العبادات இபாதத் – வணக்க வழிபாடுகள்
المعاملات முஅமலாத் – கொடுக்கல் வாங்கல்

—அட்டவணை—

அகீதா ஓர் அறிமுகம்
அகீதா ஓர் அறிமுகம் (தொடர்-01)
1. அல்லாஹ்-வை ஈமான் கொள்ளுதல் (தொடர்-02)
2. அல்லாஹ் தான் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் படைத்தான் என ஈமான் கொள்ளுதல் (தொடர்-03)
3. அல்லாஹ் தான் இவ்வுலகில் முந்தியவர்கள் பிந்தியவர்கள் அனைவருக்கும் வணக்கத்திற்குரியவன் – என்று நம்புதல் (தொடர்-04)
4. (தவ்ஹீதுர் ருபூபிய்யா, தவ்ஹீதுல் உலூஹிய்யா, (தொடர்-05) அல்லாஹ்-வுடைய அழகிய பெயர்கள் பண்புகளை விஷயத்தில் ஈமான் கொள்ளல் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்) (தொடர்-06)
5. மலக்குமார்களை மீது ஈமான் கொள்ளல் (மலக்குமார்களை பற்றிய ஒரு சில குறிப்புகள்!) (தொடர்-07)
6. அல்லாஹ்-வுடைய வேதங்களின் மீது ஈமான் கொள்ளல் (தொடர்-08)
7. அல்குர்ஆன் மீது ஈமான் கொள்ளல் (அல்-குர்அன் தொகுக்கப்பட்ட வரலாறு – இந்த பகுதி புத்தகத்திற்க்கு வெளியே உள்ளவை) (தொடர்-09)
8. தூதர்களை மீது ஈமான் கொள்ளல் (தொடர்-10)
9. முஹம்மத் (ஸல்) அவர்களின் பற்றிய நம்பிக்கை (தொடர்-10)
10. மறுமை நாள் பற்றிய நம்பிக்கை எவ்வாறு நம்ப வேண்டும். (தொடர்-11)
11. கப்ர் – மண்ணறையை ( இன்பம்! முற்றும் துன்பம்) பற்றிய நம்பிக்கை கொள்ளல் (தொடர்-11)
12. களா, கத்ர் (விதி) பற்றிய ஈமான் கொள்ளல் (தொடர்-12)
தொடர்-12 (இணைப்பு) கதர் பற்றிய நம்பிக்கைக்கு நான்கு அடிப்படைகள்!
13. தவ்ஹீத்துல் இபாதா – ஏகத்துவத்தால் இறைவனை ஒருமைப்படுத்துதல் (தொடர்-13)
14. வஸீலா தேடுவது பற்றி விளக்கம் (தொடர்-13)
15. இறைநேசர்களும் கராமத்துகளும் மற்றும் ஷைத்தானின் நேசர்களும் அவர்களுடைய வழிகேடுகளும் (தொடர்-14 & 15)
16. நன்மை ஏவுதல் தீமையை தடுத்தல் – வாஜிப் – அகீதாவின் ஒரு பகுதியாக (தொடர்-16)
17. நபி (ஸல்) அவர்களின் தோழர்களை மீது மஹப்பத் (நேசித்தல்) மேலும் அவர்கள் சிறந்தவர்கள், இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு கட்டுபடுதல் (தொடர்-17)

இதுவரை பதியப்பட்டுள்ளவை:

2 comments

  1. Assalamu alaikum
    Please send pdf link for minhajul Muslim in English

  2. Pls see me the islam kurum pen kalviyin sirapugal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *