Featured Posts

01. அல்லாஹ்-வை ஈமான் கொள்ளுதல் [e-Book]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடம் ஏராளமான பிரிவுகளும் (கொள்கையின் பெயரால்) பித்னாகளும் நிலவுவதை கண்கூடாக காண முடிகின்றது. தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரம் வீரியமாக தொடங்கிய நிலையில் குறுகிய காலத்திற்குள்ளகவே இவ்வளவு ஃபித்னாக்கள் ஏற்படக் காரணம் என்ன? அதுவும் இந்த கொள்கையை போதிக்க கூடியவர்கள் மத்தியில் – என்ற வியப்பு எல்லோருடைய உள்ளத்தில் இருக்கும் ஒரு கேள்விதான். இதனை நேர்மையான பல அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்தபோது பல உண்மைகள் வெளிப்பட்டன, அதில் முக்கியமானவைகள்

1. தஃவா களத்தில் இருக்கக் கூடிய அதிகமானவர்களுக்கு ‘இல்ம்’ குறைவாக அல்லது அதில் பூர்ணமடையாமல் இருப்பது.
2. சிறந்த நேர்மையான அறிஞர்கள் நடத்தும் வகுப்புகளில் கலந்துக் கொள்ளாமல் இருப்பதுடன் புறக்கணிப்பது
3. தஃவா களத்தில் இறங்கி தீவிர வேலை செய்துவிட்டு பின் இல்ம் தேடி புத்தகங்களை வாசிக்க தொடங்கும் போது புத்தகமே தவறாக தோன்றுவது
4. அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் நூல்களின் மொழிபெயர்ப்புகளை வாசிப்பதை விட தான் சார்ந்து இருக்கும் இயக்க (கொள்கைகளின்) சஞ்சிகைகளை வாசிப்பது.
5. குர்ஆன் ஸுன்னாவை போதிப்பதைவிட தான் சார்ந்துள்ள இயக்க கொள்கைகளை பரப்புரை செய்வதும் மாற்று கருத்துடையவர்களின் கருத்துகளை போதனைகளை புறக்கணிப்பதும்

இன்னும் ஏராளமான விடயங்கள் இருந்த போதும் இதுவே மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இந்த போக்கு நீடிக்குமானால் எதிர்கால சந்ததியினர் எது ஏகத்துவம் எது குர்ஆன் ஸுன்னா வழி என்பதை அடையாளம் காண்பதில் தவறிழைக்ககூடிய நிலை ஏற்படும். எனவே இதனை தவிர்ப்பதற்காக அறிஞர் பெருமக்கள் கண்ட மாற்றுமுறை தான் “வேர்களை தேடி” என்ற ரீதியில் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை (அகீதா-வை) மிக வீரியத்துடன் வகுப்புகளாக நடத்துவதும் அதே போன்று ஒழுக்கப் பயிற்சி பட்டறைகள் (தர்பிய்யாகள்) நடத்துவதும்தான் தீர்வாகும்.

இந்த நூல் 5 பிரதான பகுதிகளையும் ஒவ்வொரு பிரதான பகுதியிலும் பல துணை தலைப்புகளின் மூலம் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை குர்ஆன் ஸுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன.

منهاج المسلم மின்ஹாஜுல் முஸ்லிம் நூலின் உள்ளடக்கம்

العقيدة அகீதா – அடிப்படைக்கொள்கை
الآداب ஆதாப் – ஒழுக்கங்கள்
الأخلاق அக்லாக் – நற்பண்புகள்
العبادات இபாதத் – வணக்க வழிபாடுகள்
المعاملات முஅமலாத் – கொடுக்கல் வாங்கல்

தலைப்புகள்:
1. அல்லாஹ்-வை ஈமான் கொள்ளுதல்
2. அல்லாஹ் தான் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் படைத்தான் என ஈமான் கொள்ளுதல்
3. அல்லாஹ் தான் இவ்வுலகில் முந்தியவர்கள் பிந்தியவர்கள் அனைவருக்கும் வணக்கத்திற்குரியவன் – என்று நம்புதல்
4. (தவ்ஹீதுர் ருபூபிய்யா, தவ்ஹீதுல் உலூஹிய்யா, அல்லாஹ்-வுடைய அழகிய பெயர்கள் பண்புகளை விஷயத்தில் ஈமான் கொள்ளல் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்)
5. மலக்குமார்களை மீது ஈமான் கொள்ளல் (மலக்குமார்களை பற்றிய ஒரு சில குறிப்புகள்!)
6. அல்லாஹ்-வுடைய வேதங்களின் மீது ஈமான் கொள்ளல் (தொடர்-08)
7. அல்குர்ஆன் மீது ஈமான் கொள்ளல் (அல்-குர்அன் தொகுக்கப்பட்ட வரலாறு – இந்த பகுதி புத்தகத்திற்க்கு வெளியே உள்ளவை)
8. தூதர்களை மீது ஈமான் கொள்ளல்
9. முஹம்மத் (ஸல்) அவர்களின் பற்றிய நம்பிக்கை
10. மறுமை நாள் பற்றிய நம்பிக்கை எவ்வாறு நம்ப வேண்டும்.
11. கப்ர் – மண்ணறையை ( இன்பம்! முற்றும் துன்பம்) பற்றிய நம்பிக்கை கொள்ளல்
12. களா, கத்ர் (விதி) பற்றிய ஈமான் கொள்ளல்
13. தவ்ஹீதுல் இபாதா – ஏகத்துவத்தால் இறைவனை ஒருமைப்படுத்துதல்
14. வஸீலா தேடுவது பற்றி விளக்கம்
15. இறைநேசர்களும் கராமத்துகளும் மற்றும் ஷைத்தானின் நேசர்களும் அவர்களுடைய வழிகேடுகளும்
16. நன்மை ஏவுதல் தீமையை தடுத்தல் – வாஜிப் – அகீதாவின் ஒரு பகுதியாக
17. நபி (ஸல்) அவர்களின் தோழர்களை மீது மஹப்பத் (நேசித்தல்) மேலும் அவர்கள் சிறந்தவர்கள், இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுதல்

தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்…

மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…


இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *