நபிவழியில் குழந்தை வளர்ப்பு
ஆசிரியர். அப்பாஸ் அலீ MISC
பொருளடக்கம்
1. குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும்.
2. பெண் குழந்தைகளை வெறுக்கக் கூடாது.
3. குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம்.
4. குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா?
5. குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?
6. பெயர் சூட்டுதல்.
7. அகீகா.
8. முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக் கொடுக்க வேண்டுமா?
9. பால் புகட்டுதல்.
10. கத்னா செய்தல்.
11. பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும்.
12. குழந்தைப் பாசம் பெற்றோர்களை வழிகெடுத்து விடக் கூடாது.
13. நீதமாக நடக்க வேண்டும்.
14. குழந்தைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
15. வீரர்களாக வளர்க்க வேண்டும்.
16. சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
17. குழந்தைகளுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
18. செலவு செய்வது கடமை.
19. வீண் விரயம் செய்வது கூடாது.
20. தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்ல வேண்டும்.
21. சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்.
22. விளையாட அனுமதிக்க வேண்டும்.
23. விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும்.
24. அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்.
25. தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்.பிள்ளைகளை சபிக்கக் கூடாது.
27. கல்வி கற்றுத்தர வேண்டும்.
28. உபதேசம் செய்ய வேண்டும்.
29. ஒழுங்கு முறைகளை கற்றுத் தர வேண்டும்.
30. மார்க்க அறிஞர்களாக மாற்றலாம்.
31. பயிற்சி அளிக்க வேண்டும்.
32. தாயத்து தொங்க விடக்கூடாது.
33. ஓதிப் பார்க்கலாம்.
34. மகன் திருந்தாவிட்டால்…
பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் தீயவர்களாக ஆவது பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.
பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமியச் சிந்தனையில் வளர்கிறார்கள். பெற்றோர்கள் பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தால் குழந்தைகளும் பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குண நலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
இதற்கு மாற்றமாக நல்லவர்களுக்குக் கெட்ட குழந்தைகளும் கெட்டவர்களுக்கு நல்ல குழந்தைகளும் பிறப்பதுண்டு. ஆனால் இது குறைவாகும். ”ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர் என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ர) – நூல் : புகாரி (1359)
எனவே நம் குழந்தை ஒழுக்கத்திலும் மார்க்கத்திலும் நன்நடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதல் நம்மிடத்தில் இவையெல்லாம் ஏற்பட வேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.
குழந்தைகளைப் பெற்றெடுப்பது பெரிய விஷயமல்ல. ஏனென்றால் ஆடு மாடு கோழி குதிரை இன்னும் கோடிக்கணக்கான உயிரினங்களும் குட்டியிடத் தான் செய்கின்றன. பெற்றெடுத்த குழந்தைகளை சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையுள்ளது.
பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்து விடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்று விடுகிறார்கள். மனிதன் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத் தருகிறது.
திருக்குர்ஆன் மற்றும் இறைத் தூதர் (ஸல்) அவர்களின் போதனையின் அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் முறையை இந்நூல் விவரிக்கிறது. பெற்றோர்கள் கட்டாயம் இதைப் படித்துணர்ந்து இதனடிப்படையில் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு முறையைக் கையாண்டால் வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இப்ராஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்த காரணத்தினால் தான் அரும்பெரும் தியாகங்களை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள்.
அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ”என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். ”என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ”இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். அல்குர்ஆன் (37 : 102)
இப்படிக்கு
S. அப்பாஸ் அலீ MISC
தொடர்ந்து வாசிக்க இங்கு கிளிக் செய்து மின்னனு நூலை பிதிவிறக்கம் செய்யவும்
Ma shaa Allah nalla payanulla pathivu jazakallah kyren May Allahaccept our good deeds ameen