இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட் (தமிழ் பிரிவு)
வழங்கும்
சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
பாடம்: மனித உயிர் உரிமை பற்றிய நாற்பது ஹதீஸ்கள்
அரபி மூலம்
தொகுப்பு :மிஷ்அல் இப்னு நாஸிர் (ஹபிலஹுல்லாஹ்)
அணிந்துரை: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் குனைமான்
பகுதி-1: அறிமுக உரை & ஹதீஸ் 01 முதல் 05 வரை
விளக்கவுரை தமிழிலில் வழங்குபவர்:
மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
அல்-கோபர், சவூதி அரபியா
நாள்: 19-08-2017 (சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 வரை)
இடம்: இந்தியன் இஸ்லாஹி சென்டர் – மஸ்கட்
நிகழ்ச்சி ஏற்பாடு:
Indian Islahi Center (Tamil Wing) Muscat
அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில்
மேலதிக தொடர்புக்கு: 00968 97608092
1-6862. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலைசெய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
2-6864. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
3-6871. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், பொய் கூறுவதும் அல்லது பொய்ச் சாட்சியம் சொல்வதும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.
இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் “பெரும் பாவங்கள்” என்று வந்துள்ளது.
4-4019. உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) கூறினார்.
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், “இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்” என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (வேண்டாம்.) அவனைக் கொல்லாதே” என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்!” என்று கேட்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால்
அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய்” என்று கூறினார்கள்.
5-2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை
கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.