தமிழக முஸ்லிம்கள் மத்தியில் இமாம்கள் என்றால் நான்கு மத்ஹபை சார்ந்த இமாம்கள் (அதாவது அபூஹனிபா (ரஹ்), ஷாபீஃ (ரஹ்), ஹம்பலீ (ரஹ்) மற்றும் மாலிக் (ரஹ்) இவர்கள்) தான் என்ற எண்ணம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. இச்சூழலில் தான் 80-களில் வீருண்டு எழுந்த ஏகத்துவ-தவ்ஹீத் எழுச்சியை கண்ட மத்ஹபை சார்ந்த உலமாக்கள் கடுமையாக எதிர்க்க தொடங்கினார்கள். இதன் எதிர்மறை விளைவாக ஏகத்துவ பிரச்சாரத்தில் இருந்தவர்கள் மத்தியில் மத்ஹப் இமாம்களைப்பற்றி தப்பும் தவறுமாக அல்லது மிகைப்படுத்தப்பட்ட உவமைகளின் மூலமாக தவறான வடிவம் கொடுத்து அறிமுகப்படுத்தப்பட்டன. (இன்றளவும் அதனை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்). இதன் காரணமாக ஏகத்துவவாதிகள் மத்தியில் நான்கு இமாம்களும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார்கள் அதனையே பிரச்சாரமாகவும் செய்து வந்தார்கள். நாளடைவில் இமாம்களைப்பற்றி அசல் வடிவம் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில் அவர்களைப்பற்றிய பல வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. அதில் குறிப்பாக சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் பணிபுரியும் மவ்லவி. முஜாஹித் பின் ரஸீன்; இமாம் ஷாபீஃ (ரஹ்) அகீதா-வை அவர்களின் மாணவர்களின் ஒருவரான இமாம் அபுல் ஹசன் அலி பின் அஹமத் அல்-ஹக்காரி (ரஹ்) வழியாக வந்த செய்திகளின் தொகுப்பின் விரிவுரையை நடத்திவருகின்றார். (ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9:30 வரை நடைபெற்று வருகின்றது)
ஏகத்துவ பிரச்சாரம் எந்த அடிப்படை அகீதா-வை முன்னிறுத்தி செய்யப்பட்டுவருகின்றதோ அதே அடிப்படை (அகீதா) கொள்கையைத்தான் இமாம் ஷாபீஃ (ரஹ்) போதித்தார்கள் என்ற செய்தியை கேள்வியுறும், இமாம்களின் பெயர்களால் மத்ஹபை நடத்திவரும் உலமாக்கள், இச்செய்திகளை தகர்தெறிவதற்காக செய்தியை கொண்டுவருபவரின் (இமாம் உஷாரியின்) நம்பகத்தன்மையை கேள்வி குறியாக்குவது அதன் மூலம்; இமாம் ஷாபீஃ (ரஹ்) அவர்களின் செய்தி மக்களிடம் எடுபடாமல் இருக்கும் எதிர்பார்க்கின்றார்கள். அதனால் இமாம் அபுல் தாலிப் உஷாரி (ரஹ்) பற்றிய விமர்சனங்களில் உள்ள குறைபாடுகளையும் அது எவ்வகையில் பிழையான விமர்சனம் என்பதை தமிழுலகில் விளங்கி கொள்ளும் வகையில் இந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-7)
கேள்வி-10: இமாம் அபுல் தாலிப் உஷாரி பற்றிய இமாம் தஹபியின் விமர்சனம் சரியானதா?
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும்
சிறப்பு அகீதா வகுப்பு
இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம்
வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்