Featured Posts

தூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள் [துஆக்கள் அறிமுகம்-1]

துஆக்கள் அறிமுகம்

நமது வாழ்க்கையில் அன்றாடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக நபியவர்கள் பல துஆகளை நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நாம் மணனமிட்டு அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வந்தால் நபியின் வழிமுறையை நாம் நடை முறைப்படுத்தியதோடு, மறுமையில் அதற்குரிய நன்மைகளை தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த பகுதியில் தொடராக துஆகள் அறிமுகம் என்று தேவையான துஆகளை தொகுத்து வழங்கவுள்ளோம். உங்கள் பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைப்பதோடு, நீங்களும் மனப்பாடம் செய்து வாழ்க்கையில் அவைகளை அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வாருங்கள். அல்லாஹ்வை நினைப்பதில் தான் உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

ஒரு சந்தர்ப்பத்தில் பல துஆகளை நபியவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள். எனவே ஒரு துஆவோடு நிறுத்திக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட அனைத்து துஆகளையும் முடிந்தளவு பாடமிட்டுக் கொள்ளுங்கள். முடிந்தளவு அனைத்து துஆகளையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் ஓதப் பழகிக் கொள்ளுங்கள் பாடமிட்டஅந்த துஆகள் மவ்த் வரை மறக்காமல் இருப்பதற்கு நடைமுறை சிறந்த வழியாகும்.

தூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்

1.தூங்கும் முன்:

اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

பொருள் : இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)
ஆதாரம்: புகாரி

2.மேலும், வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்:

اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ

பொருள் : இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம்

3. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வருமாறு பிரார்த்தியுங்கள்:

بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

பொருள்: இறைவா! நீ (அனைத்துக் குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக! அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், (“சுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ!” என்பதற்குப் பகரமாக) பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ (என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)” என்றும், (“ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா” என்பதற்குப் பகரமாக) “ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா” என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக!) (முஸ்லிம் 5257)

4. ஹதீஸில் துஆக்கள்: தூங்கும் முன்

வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.

اَللّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالاِنْجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اَللّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

பொருள் : இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை விட்டும் எங்களைபாதுகாப்பாயாக!

5.மேலும்

நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு, பின்னர் வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு, கீழ்காணும் துஆவை ஓது. நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டு படுத்து, அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

اللهم أسلمتُ نفسي إليك، ووجهتُ وجهي إليكَ، وفوَّضتُ أمري إليك، وألجأتُ ظهري إليك، رغبةً ورهبةً إليك، لا ملجأَ ولا منجى منك إلا إليك، آمنتُ بكتابِك الذي أنزلتَ، ونبيِّك الذي أرسلتَ

பொருள்: இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க, உன்னை விட்டால் வேறு ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். (ஆதாரம்: புகாரி – 247)

6.மேலும் இரவில் துாக்கம் விழித்து (தஹஜ்ஜத் தொழுகைக்காக) எழுந்தவுடன் துஆ…

لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும்.
என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். (புகாரி 1154)

7. தூங்கி எழுந்தவுடன்

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

பொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி

இவைகளை மணனமிட்டு அன்றாடம் ஓதி வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *