Featured Posts

அறிவிப்பு | அல்-கோபர் தர்பியா-4 நிகழ்ச்சி நிரல் (பாடத்திட்டம் – Syllabus)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தம்மாம், கோபர், ராக்கா, தஹ்ரான், ரஹிமா மற்றும் ஜுபைல் பகுதியில் வாழும் தமிழறிந்த சகோதர சகோதரிகளுக்கான இஸ்லாமிய மார்க்கத்தை அதன் மூல ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ள சிறந்ததோர் வாய்ப்பு! (எமது இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்களுக்கு இந்த வகுப்பின் வீடியோ பதிவுகளை உடனுக்குடன் பதிவேற்றும் செய்யப்படும் – இன்ஷா அல்லாஹ்)

எங்கே?
நெறிப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடைப்படையில் நான்கு மாத கால (எட்டு வாரங்கள் கொண்ட) சிறப்பு தர்பியா நிகழ்ச்சியை அல்-கோபர் (ஹிதாயா), தஹ்ரான் (சிராஜ்), ராக்கா மற்றும் தம்மாம் (ICC) தாஃவ நிலையங்கள்; சார்பாக 2017 ஆண்டு டிசம்பர் மாதம் 22 தேதி முதல் அல்-கோபர் நகரில் அமைந்துள்ள அல்-பஷாயிர் என்ற அரபி பாடசாலையில் (பிரசித்தி பெற்ற Al-Rashid Mall அருகில்) நடைபெற்று வருகின்றது.

எப்பொழுது?
பிரதி மாதம் 2வது மற்றும் 4வது வெள்ளிகிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு இந்த வகுப்பு நடைபெறும்.

இந்த தர்பியாவின் வகுப்பு ஆசிரியர்கள்:

அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம்

அஷ்-ஷைக். அப்பாஸ் அலி MISC
அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா)

அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

அஷ்-ஷைக். மஸ்வூத் ஸலபி
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்

அஷ்-ஷைக். அப்துல் அஜிஸ் முர்ஸி
அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்

அஷ்-ஷைக். அஜ்மல் அப்பாஸி
அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ்)

எப்படி?
ஆறு (6) பிரதான தலைப்புகளில் இந்த தர்பியா வகுப்பு நடத்தப்படுகின்றது.

1. கொள்கை விளக்கத் தொடர் – அகீததுல் கைரவாணி
(இமாம் அபூ ஸைதுல் கைரவாணி ராஹிமஹுல்லாஹ்)

2. புஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் – (கல்வியின் ஒழுங்குகள்)

3. ஆறு (6) ஹதீஸ் கிரந்தங்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம்
(அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத் ஹபிஃழஹுல்லாஹ் அவர்களின் நூலிலிருந்து)

4. புஹாரியிலிருந்து கிதாபுல் பய்ஃ – (வியாபாரம் பற்றிய பாடம்)

5. நபிகள் நாயகத்தின் ஸீரா சுருக்கமாக
(இமாம் இப்னு கஸீர் ராஹிமஹுல்லாஹ் அவர்களின் நூலிலிருந்து)

6. நான்கு கலீபாஃக்களின் ஆட்சி சுருக்கமாக –
(அக்ரம் ழியா அல் உம்ரியின் தொகுப்பிலிருந்து)

சிறப்பு ஏற்பாடுகள்:
• இந்த தர்பியா வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தரமான மதிய உணவு மற்றும் தேனீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• பெண்களுக்கு தனி இடவசதி மற்றும் குழந்தைகளுக்கு (வகுப்புகள் நடைபெறும் சமயம் சிறுவர் & சிறுமியர்களுக்கு தனி அமர்வு)
• 8 வாரங்களுக்கு பின் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் செய்ய வேண்டியவை:
தொடர்ச்சியாக அனைத்து தர்பியா வகுப்பில் கலந்து கொள்ள முடியுமாயின் கீழ்கண்ட அலைபேசியில் எதாவது ஒன்றில் உங்கள் வருகை உறுதிசெய்து கொள்ளவும். அத்துடன் மேலகதிக விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

0599148665 | 0558090443 | 0596481392 | 0534802476 | 0504774197

முதல் பாடத்தின் 40 கேள்விகள் பதிவிறக்கம் செய்ய.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *