-எம்.ஐ. அன்வர் (ஸலபி)-
மனித வாழ்வை நிலைபெறச் செய்யும் முதல் அம்சமாகவும், மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை அலகாகவும் குடும்பம் திகழ்கிறது. மனித இனம் இவ்வுலகில் நிலை பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மனிதனை ஜோடியாகப் படைத்துள்ளான் எனவேதான் இஸ்லாம் திருமணத்தின்பால் தூண்டுதளிப்பது மாத்திரமின்றி அதனை தன் இரட்சகனிடம் நெருங்கும் வழியாகவும்; பார்க்கின்றது. அந்தவகையில் இஸ்லாம் துறவறத்தை தடைசெய்து குடும்ப வாழ்க்கையின்பால் மனித சமூகத்தை அழைத்துச் செல்கிறது.
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இறுதி நாளைப் பற்றியும், நரகத்தின் வேதனைப் பற்றியும் உபதேசம் செய்தார்கள். இதன் பின்னர் 10 நபித்தோழர்கள் உதுமான் இப்னு மழ்ஊன்(ரழி) அவர்களின் வீட்டில் ஒன்று கூடினார்கள். இரவெல்லாம் விழித்திருந்து இறைவனை வணங்க வேண்டும். இறைச்சியை உண்ணமாட்டோம், துறவறம் மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் இவரையும் ஏனையோரையும் அழைத்து (நான் உங்களுக்கு ஒருபோதும் இப்படி ஏவவில்லையே) என்னைப் பாருங்கள் நான் சில நாட்களில் நோன்பு நோற்கிறேன் இரவின் சில பொழுதுகளில் வணங்குகிறேன், சில பொழுதுகளை மனைவியருடன் கழிக்கிறேன். ஏவர் என்னை சேரவில்லையோ அவர் என்னை சேர்ந்தவரல்லர் எனக் கண்டித்தார்கள்.
விசுவாசிகளே! இறைவன் உங்களுக்களித்தவைகளை விலக்கிக்கொள்ளாதீர்கள். இன்னும் அனுமதியளித்தவற்றில் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ் வரம்பு மீறுவோர்களை நேசிக்கமாட்டான்.(5:87)
இன்னும் இறைவன் உங்களுக்கு உணவாக்கியிருப்பதில் ஆகுமாக்கப்பட்ட நல்லதை புசியுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.(6:86)
இஸ்லாம் திருமணம் செய்வதை மிகவும் வற்புறுத்தி இருக்கின்றது. வசதி வாய்ப்பிருந்தும் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் முஸ்லிம்கள் அல்லர் எனக் கூறும் நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தனது மனைவியின் செலவீனத்தை ஈடுசெய்வதற்காக உழைக்கும்பட்சத்தில் அல்லாஹ்வால் சிறப்பிக்கப்படுபதாவும், ஒரு கவழம் உணவை அன்புடன் மனைவிக்குட்டினால்அதற்கும் அவர் பாராட்டப்படுவதாகவும் நவின்றுள்ளார்கள். (புஹாரி)
இஸ்லாமும், இனவிருத்தியும்
மனித இனம் நிலைபெற வேண்டும் என்பதே திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும் என்பதால் இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி அதன்பால் உற்சாகப்படுத்துகின்றது. இதனால்தான் இனப்பெருக்கத்தை வழியுறுத்திய நபி(ஸல்) அவர்கள் மனைவியாக அமையப் போகிறவளின் ஆளுமைப் பண்புகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
‘அதிகம் பிள்ளைகளைப் பெறக்கூடிய அதிகம் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொள்ளக்கூடிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் மறுமை நாளில் பிற சமூகங்களின் முன்னிலையில் உங்களது சன்த்தொகை மூலம் நான் பெருமிதம் அடைவேன்.’ (அஹமத்)
‘நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் சந்ததியைப் பெருக்கிக் கொள்ளுங்கள், இனத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக நான் மறுமை நாளிலே ஏனைய சமூகங்களின் முன்னிலையிலே பெறுமை அடைவேன்.’ (அபூதாவுத்)
எனவேதான் விதவைகளை விட கன்னிப்பெண்கள் இனப்பெருக்க ஆற்றல் அதிகம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களைத் திருமணம் செய்யும் படி பிரஸ்தாபித்திருக்கிறார்கள். மேற்கூறிய ஹதீதில் வரும் ‘அல-;வலூத்’ எனும் அரபுப்பதம் அதிகம் பிள்ளைகளைப் பெறக்கூடியவள் என்ற கருத்தை தருவதை அவதானிக்கலாம்.
ஒரு முறை ஜபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் ஒரு விதவைப் பெண்ணை மணமுடித்து அவர்களிடம் சென்ற போது ‘ஒரு கன்னிப்;பெண்ணை நீ; திருமணம் முடித்து இருக்க வேண்டாமா? ‘நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சி விளையாடியிருக்கலாமே என்றார்கள்.’ பின் அவ் நபித்தோழர் அவ்விதவைப் பெண்ணை திருமணம் முடித்ததன் நோக்கத்தை தெளிவுப்படுத்தினார்.
இவ்வாறு திருமண வாழ்வின்பாலும், பிள்ளைப்பெற்றின்பாலும் ஆர்வமுற்றுகின்ற நபி(ஸல’) அவர்களின் ஆர்வமுற்றுகின்ற நபி(ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீதுகள் இனவிருத்தியை தூண்டுபவையாக இருக்கின்றன. ஆல்-குர் ஆனிலும் இதனை வழியுறுத்துகின்ற பல வசனங்கள் காணப்படுவதை அவதானிக்கலாம். ‘உங்கள் மனைவிகள் உங்களுக்குரிய விளைநிலங்களாகும். ஆகவே உங்கள் விளைநிலத்துக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள். (2:223) என்ற அல்-குர் ஆன் வசனமும் இதனையே குறுப்பிடுகின்றது.
குடும்பக் கட்டுப்பாடு (Family Planning)
இஸ்லாம் இனவிருத்தியின்பால் தூண்டுதல் அளித்ததுடன் மாத்திரம் நின்றுவிடாது. குடும்ப ஒழுங்கமைப்பைப் பற்றியும் அது பிரஸ்தாபிக்கின்றது. பிள்ளைப் பேற்றிலே இருக்க வேண்டிய ஒழுங்குகளையும் அது பேசத் தவறவில்லை. இஸ்லாமிய சட்டவாக்கம் மிகவும் பரந்தது. அது வெறுமனே நம்பிக்கையையும் வணக்க வழிபாடுகளையும் மாத்திரம் சார்ந்ததன்று. மாறாக குடும்ப அமைப்பு உட்பட மனிதனின் சகல நடவடிக்கைகளையும் ஒழுங்கமைக்கும் ஒரு சாதனமாகவே அமைந்து காணப்படுகின்றது. எனவே அது அவசியம் என உணரும் சந்தர்ப்பத்தில் குடும்பத் திட்டமிடலுக்கு ஆதரவு வழங்குகின்றது. இது இஸ்லாமிய சட்டத்துறையில் தனிப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக அமைகின்றது. இது குழந்தைப் பேறுகளுக்கிடையே இடைவெளி ஏற்படுத்துவதாகவும், அதன் தொகையை ஒழுங்குபடுத்துவதாகவும் அமையவேண்டுமேயன்றி நிரந்தரத் தடைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இட்டுச்செல்லக்கூடாது.
குடுப்பத்திட்டத்தைப் பொறுத்தமட்டில் அது பிள்ளைகளுக்கிடையே இடைவெளி ஏற்படுவதை மையமாகக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் தனது குடும்பத்தை திட்டமிடுவதிலோ அல்லது குழந்தைப் பெறுகளை ஒழுங்குப்படுத்திக் கொள்வதிலோ பிழை இல்லை. ஆனால் இது அளவு கடந்த இடைவெளிகளை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. முகைக்கும் திட்டமிடல் சிலபோது அபாயகரத்திற்கு ஈட்டுச்செல்லலாம். இது குறித்து இஸ்லாமிய வழிகாட்டல்களை நோக்கினால் இரு பிள்ளைகளுக்கிடையிலான இடைவெளி மூன்று வருடங்களாகயிருப்பது சிறந்தது என்பதை அவதானிக்கலாம்.
‘எவரேனும் தலாக் கூறப்பட்ட மனைவிகளிடம் தங்களது பிறந்த குழந்தைகளுக்கு தலாக் கூறப்பட்ட மனைவிகளைக்கொண்டே பாலூட்டுவதை பூர்த்தியாக்க விரும்பினால் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்மார்கள் இரண்டு ஆண்டுகள் வரை பாலூட்டவும்.'(2:233)
எனவே ஒரு சிசு கருவிலிருக்கும் 10மாதங்களும் பாலூட்ட இரு வருடங்களாக மொத்தம் 3வருடங்கள் இடைவெளி ஏற்படுவதை அவதானிக்கலாம். ஆத்தோடு பிள்ளைகளுக்கிடையிலான இடைவெளி 2வருடமாக அவசியம் அமைதல் வேண்டுமென்று மேற்படி வசனம் குறிப்பிடவில்லை மாறாக ஓர் ஒழுங்கை மாத்திரம் வலியுறுத்துகின்றது என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.
குடும்பக்கட்டுப்பாட்டை அனுமதிக்கின்ற காரணமாக பின்வரும் காரணங்களை முன்வைக்கலாம்.
1. தாயின் உயியிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ ஆபத்து ஏற்படுமனே அனுபம் மூலமாகவோ அல்லது நம்பதகுந்த மருத்துவர்மூலமாகவோ அறிந்தால் குடும்பக்கடடுப்பாட்டிற்கு அனுமதியுண்டு. இக்கருத்திற்கு ஆதாரமாக கீழ்வரும் குர்-ஆன் வசனங்களைக் குறிப்பிட முடியும்.
‘உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேண்டாம்.’ (2:195)
2. லௌகீகரீதியில் அமைந்த சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். ஆதன் பின்னர் மார்க்க விவகாரங்களைம் பாதிக்கும் தனது குழந்தைகளுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது வேறு பாவங்களையோ செய்ய வேண்டியேற்படுமென்று ஒருவர் அஞ்சும் போது குடும்பக்கட்டுப்பாட்டிற்கு அனுமதியுண்டு.
‘அல்லாஹ் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுவதை விரும்பவில்லை.(5:6)
3. ஒருவர் தனது குழந்தையின் உடல் ஆரோக்கியம் அஞ்சம் நிலையிலோ அல்லது குழந்தைகளை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமனே அஞ்சும் நிலையிலோ குறித்த செயற்பாட்டிற்கு அனுமதியுண்டு.
ஒரு முறை ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன் என்றார். நீர் ஏன்? ஆவ்வாறு செய்கின்றீர் என வினாவ அதற்கு அம்மனிதர் தன் குழந்தையையிட்டு அஞ்சுகின்றேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாகயிருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்குமென்றார்கள். அதாவது இத்தகைய தனிமனிதர்களின் செயற்பாடுகள் முழு சமூகத்தையும் பாதிக்காது என்பதாகும்.(அஹமத்)
4. பால் குடி குழந்தையின் நிலையைக் கருத்திற்கொண்டு தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமேன கருதுவதும் குடும்பக்கடடுப்பாட்டை ஆகுமாக்குகின்ற ஒரு நிலையாகும். புhல் குடி குழந்தையிருக்கும் நிலையில் தனது மனைவியுடன் (கருத்தறிக்கும் நோக்கோடு ) உடலுறவு கொள்வதை இரகசிய கொலையேன வர்ணித்துள்ளார்கள். ஆயினும் இதனை இஸ்லாமிய ஷரீஅத முற்றாக தடை செய்யவில்லை.
குடும்பக்கட்டுப்பாடு சமூகத்திட்டங்களில் ஒன்றாக மாற்றப்படுவதனாது இஸ்லாமிய ஷரீஅத்துடன் நேரடியாக மோதுவதாக அமைகின்றது. எனவே இது பொதுப்படையாக நோக்கப்படக்கூடாது. அரசினாலோ ஏனைய நிறுவனங்களினாலோ அல்லது குழுக்கள் மூலமாகவோ அல்லது கூட்டுத்திட்டமாகவோ பிரச்சார முயற்சியாக மேற்கொள்ளப்படுவதனை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிம்களை தம் சமூக அங்கத்தினவர்களை அதிகரித்துக்கொள்ளுமாறு ஏவிய நபி(ஸல்) அவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டை கொள்கையாக பிரகடனம் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
‘அல்-அஸ்லும்’ இஸ்லாத்தின் நிலைப்பாடும்
அல்-அஸ்ல் என்பது உடலுறவின் போது தனது இந்திரயத்தைப் பெண்ணின் கருப்பவறையை அடைய முடியாது. தடுப்பதைக் குறிக்கும். அன்று முதல் இன்று வரை குடும்பக்கட்டுபாட்டிற்குரிய வழிமுறைகள் கையாளப்பட்டு வந்துருக்கின்றன. இந்தவகையில் நபி(ஸல்) அவர்களின்காலத்தில் குடும்பக்கடடுப்பாட்டிற்குரிய செயற்பாடாக அல்-அஸ்ல் எனும் செயற்பாடே காணப்பட்டது.
‘நபி(ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் விந்தை கருப்பத்தில் செலுத்துவதை தவிர்த்து வந்தோம். இன்னோரு அறிவிப்பில் அல்-குர் ஆன் இறக்கிக் கொண்டிருந்த வேளை நாங்கள் விந்தை கருப்பத்தில் செலுத்துவதை தவிர்த்து வந்தோம்.(புஹாரி)
மேற்ச் சொன்ன ஹதீதுகள் அஸ்ல் ஆகுமாதென ஷஹாபாக்கள் செய்து வந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. இருப்பினும் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) போன்றோர் அஸ்லை விரும்பவில்லை என்பதாகவும் தகவல்கள் காணப்படுகின்றன. ஆனால் நபி(ஸல்) அவர்கள் இம்முறையை ஹாராம் எனவுமில்லை தடுக்கவுமில்லை.
ஆபூஷயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்களுடன் சேரும் போது அஸ்லை மேற்கொண்டு வந்தோம். இதனை நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அஸ்ல் எனும் செயன்முறையை நீநந்களும் மேற்கொள்கின்றீரா என நீங்களும் மேற்கொள்கீன்றீரா? என 3 முறை கேட்டுவிட்டு மறுமை நாள் வரை உருவாக வேண்டிய அனைத்துப்படைப்புக்களும் உருவாகிய தீரும் என பதிலளித்தார்கள். (புஹாரி)
எனவேதான் கியபஸின் அடிப்படையில் நவீன காலப்பிரிவில் ஆணுறை பாவித்தல், வலயம் வைத்தல், மாத்திரைகளைப் பயன்படுத்தல், இஃதிஸால் எனும் போன்ற முறையைக் கையாளுதல் போன்ற முறைகள் கூடும் என்ற முடிவுக்கு வருகின்றனர். இவற்றில் இஃதிஸால் தவிர்ந்த அனைத்து வழிமுறைகளும் பக்க விளவுகளை ஏற்படுத்தக் கூடியவைகளே இவை சிலபோது நிரந்தர மலட்டுத்தன்மைக்கிட்டுச் செல்லும்.
குடும்பத் திட்டமும் கருச்சிதைவும் (Family Planning and Abortion)
குடும்பத் திட்டம் என்பது ஆண்த்திரவமும், பெண்முட்டையும் கலந்து நுகம் உண்டாவதை தடுப்பதாகும். ஆனால் கருச்சிதைவு என்பது உண்டான உயிரை அழித்தலாகும். இஸ்லாத்தில் குடும்பத் திட்டத்திற்கு இடமுண்டே தவிர கருச்சிதைவுக்கு இடமில்லை. வேண்டியபடி இடைவெளி விட்டு விரும்பியளவில் குழந்தை பெறுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கின்றது. உயிரை அழிப்பதை இஸ்லாம் தடைசெய்கின்றது.
‘தரித்திரத்துக்காக உங்கள் மக்களை கொலை செய்யாதீர்கள்.(6:151)
‘வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள்.(17.31)
உலகில் வருடமொன்றுக்கு 5கோடி கருச்சிதைவு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. வருடந்தாம் 80ஆயிரம் இளம்பெண்கள் கருச்சிதைவால் மரணமடைகின்றார்கள், நாளாந்தம் 200 வாழவேண்டிய இளம்பெண்கள் கருச்சிதைவு காரணமாக அநியாயமாக கொல்லப்படுகிறார்கள்.கருச்சிதைவு இலங்கை நாட்டிலும் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் நாளொன்றுக்கு இலங்கையில் 750 கருச்சிதைவுகள் இடம்பெறுகின்றன. துரதிஷ்டவசமாக முஸ்லிம் சகோதரிகளே கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள். குடும்பத்திட்ட முறையாக கருச்சிதைவை செய்து கொள்ள இஸ்லாத்தில் ஒருபோதும் இடமில்லை. ஆனால் மருத்துவக் காரணங்களுக்காக அதாவது அந்த கருப்பத்தால் தாயின் உயிருக்கு திட்டவட்டமாக ஆபத்து ஏற்படும். என்றிருந்தால் அதற்காக கருச்சிதைவு செய்து கொள்ள முடியும். ஆதிக இரத்தழுத்தம’ ஏற்பட்டு பிரசவம் தொடரப்பட்டால் தாய் மரணமடையக்கூடிய ஆபத்திருப்பின் அதற்காக கருச்சிதைவு ஏற்படலாம். அதற்கு இந்நாட்டுச் சட்டத்திலும் இடமுண்டு. இஸ்லாம் அனுமதியளிக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். ஒரு பெண் மற்றப் பெண்ணின் மீது கல்லால் எறிந்த போது கருவுற்றிருந்ந பெண் கருச்சிதைவுக்குல்லானால் இதையறிந்த நபி(ஸல்) அவர்கள் இந்த பெண் ஒரு அடிமையை விடுதலை செய்து குற்றப்பரிகாரம் செய்து கொள்ளவேண்டுமென்றார்கள். (புஹாரி)
எனவே குடும்பத்திட்டத்தை ஆகுமாக்கும் இஸ்லாம், கருச்சிதை முற்றாக தடை செய்திருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.
துணை நின்றவை:
1.கலிய்யத்து தஹ்தீதிந் நஸ்ல் பில் ஷரீஆ அல்-இஸ்லாமிய்யா
உம்மு குல்தூம் யஹ்யா முஸ்தபா
2.அல்-அஹ்காம் அத்திப்பிய்யா அல்-முதல்லிக்கா முஹம்மத் ஹாலிக் மன்சூர்
3.இஸ்லாமும் குடும்பத்திட்டமும்; வைத்தியக் கலாநிதி eIPKBd;
4.அல்-ஜாமிஆ இதழ்-03 (2001)
5.Family Planning and Abortion – an Islamic viewpoint Qasmi, Qadi Mujahidul Islam (1989) South Africa
தம்பி அன்வர் ஸலபி அவர்களே நல்ல ஒரு ஆக்கத்தை பதிவு செய்துள்ளீர்கள்… அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!