Featured Posts

மவ்லவி M.I. அன்வர் (ஸலபி)

ரமளான் – ரய்யான் எனும் சுவன வாயிலை நோக்கி

உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமளானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். வீடுகளை சுத்தப்படுத்துவது, தொலைக்காட்சி பெட்டிகளை அகற்றுவது, பள்ளிவாயல்களை அலங்கரிப்பது என அவை தொடர்கின்றன. புற ரீதியான வரவேற்பை விட அக ரீதியான வரவேற்பையே ரமளான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமளானையும் அத்தகைய விரிந்த பார்வைகளோடுதான் நாம் …

Read More »

சூடான்: என்ன நடக்கிறது அங்கே?

எம்.ஐ அன்வர் (ஸலபி) முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்து வந்த உமர் பஷீரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த அவல் இப்ன் அவ்ப் கடந்த 11 ஆம் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். உமர் பஷீர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் பதவியிலிருந்து அவர் …

Read More »

சுதந்திர இலங்கையும் முஸ்லிம் சமூகமும்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுயாட்சியைப் பெற்று 71 வருடங்களாகிறது. இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். தமது அதிகாரத்துக்குள் வைத்திருந்த சில நாடுகளுக்கு முதற்கட்டமாக மேலாட்சி என அறியப்படும் …

Read More »

கவாரிஜிய சிந்தனை – ஓர் அறிமுகம்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு உமர் (ரழி) அவர்களின் கொலையோடு அரசியல் மற்றும சமூகரீதியான கெடுபிடிகளுக்கான பித்னாவின் வாசல் திறக்கப்பட்டது. வரலாற்றில் “பித்னா” நிகழ்வு என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் உஸ்மான் (ரழி) அவர்களின் படுகொலை சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் கருத்து முரண்பாடு இஸ்லாமிய உம்மத்தின் ஐக்கியத்தில் பிளவுகள் ஏற்படக் காரணமானது. அலி (ரழி) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் இரு …

Read More »

நவயுகத்தின் அரைகூவலும் இஸ்லாமிய இளைஞர்களும்

மனித வாழ்க்கையில் இளமைப்பருவமே (Child Hood) முக்கியமான காலகட்டமாகும். இப்பருவம் ஒரு கத்திமுனையைப் போன்றது. அதனை ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தலாம். இதே போன்றே இப்பருவமும் ஆக்கத்திற்கோ அல்லது அழிவிற்கோ பயன்படுத்தமுடியுமான பருவமாகும். இளமைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும், முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் கொண்ட பருவமாகும். வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்திறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தை பயன்படுத்திக் கொள்ளாதவன் …

Read More »

குழந்தைகள் அல்லாஹ்வின் அருட்கொடைகள்

அருளாக விளங்கும் ஒவ்வொன்றும் அமானத் ஆகும். சொத்து, செல்வங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள். அவை இஸ்லாத்தின் பார்வையில் அமானிதமாக நோக்கப்படும். தேக ஆரோக்கியம் ஓர் அருளாக இருப்பது போல் அது ஓர் அமானிதமுமாகும். இளமைப் பருவம் ஓர் அருள். அவ்வாறே அது ஓர் அமானிதமாக கருதப்படும். அந்த வகையில் அருளாக கிடைக்கப்பெற்ற குழந்தைகள் மிகப் பெரும் பாக்கியமும் அமானிதமுமாகும். உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் …

Read More »

பள்ளி இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்

எம்.ஐ அன்வர் (ஸலபி) பள்ளிவாசல்களில் இமாமத் பணியில் ஈடுபடும் இமாம்களின் தொழில் மற்றும் வாழ்வாதார நிலை பற்றி இன்று அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுவது கிடையாது. சமூகத்தளத்தில் பள்ளிவாயல் இமாம்களின் பிரச்சினை குறித்து பெரும்பாலும் யாரும் அழுத்தம் கொடுத்து பார்ப்பதுமில்லை. முஸ்லிம் சமூக மரபில் ஓரங்கட்டப்பட்ட ஒரு தரப்பினராக சிலவேளை அவர்கள் நோக்கப்படும் துரதிஷ்ட நிலையும் இல்லாமலில்லை. பள்ளிவாயல் நிருவாகிகளின் அதிகாரப் பிரயோகத்திற்குள்ளும் அளவுகடந்த நெருக்குவாதங்களுக்கு மத்தியிலும் தனிமனிதனாக நின்று …

Read More »

ஆதரவற்ற அநாதைகளை அரவணைப்போம்!

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- சமூக கட்டமைப்பில் குடும்பம் என்ற அலகு நற்பிரஜைகளை உருவாக்கும் முக்கிய நிறுவனமாக காணப்படுகிறது. கணவன் மனைவி எனும் இரு அச்சாணிகளே குடும்பம் என்ற சக்கரம் தொழிற்பட காரணமாக உள்ளனர். தந்தை , தாய் , பிள்ளைகள் எனும் தனிநபர்கள் பலரின் கூட்டு வாழ்க்கை குடும்பம் என்ற அலகு தோற்றம் பெற வழிகோலுகிறது. அந்தவகையில் ஒரு குடும்பத்தின் சீரான இயக்கத்திற்கு தந்தையின் வகிபாகம் முக்கியமானதாகும். குடும்பத்தின் பொருளாதார …

Read More »

மது , போதை வஸ்துப் பாவனையும் இன்றைய இளைஞர் சமுதாயமும்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- போதைப் பொருள் பாவனை நாடளாவிய மட்டத்தில் மோசமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிப்பதற்கான கடும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. இருந்த போதிலும் நாளாந்தம் போதைப்பொருள் பாவனை குறித்த செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன. உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் …

Read More »

மியன்மார்: இனசங்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள்

-எம். ஐ அன்வர் (ஸலபி)- ஐ.நா வின் அறிக்கையின்படி உலகில் இன்று தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும், அதேநேரம் மோசமான மனித அழிவை சந்தித்துவரும் சிறுபான்மை சமூகக் குழுவாக ரோஹிங்ய முஸ்லிம்கள்அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மியன்மார் அரசாங்கத்தின் முஸ்லிம் சிறுபான்மையான ரோஹிங்யர்களின் மீதான ஒடுக்குமுறை சர்வதேச நாடுகளின் கவனத்தைக் ஈர்த்துள்ள மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அதிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் …

Read More »