Featured Posts

நபிமார்களின் நேர்வழிக்கும் வழிகேடர்களின் சதிகளுக்கும் மத்தியில் பெண்கள்

المرأة بين شريعة الأغبياء وشريعة الأنبياء
நபிமார்களின் நேர்வழிக்கும் வழிகேடர்களின் சதிகளுக்கும் மத்தியில் பெண்கள்
  • மேடைகளில் பாடுவதை அனுமதிக்கின்றனர் பாவிகள் 

أباحوا لها الغناء على المنصات والله قد منعها من الآذان والجهر بالاقامة والتأمين حفاظا على رقتها 

ஆனால் பெண்களின் மென்மையைக் கவனத்தில் கொண்டு, அதான், சப்தமிட்டு இகாமத் மற்றும் ஆமீன் கூறுதல் போன்றவற்றைக் கூட பெண்களுக்குத் தடைசெய்துள்ளது இஸ்லாம்.

 

  • சினிமாக்களிலும் நாடகங்களிலும் பெண்கள் நடிப்பதை அனுமதிக்கின்றனர்

أباحوا لها التمثيل في دور السينما وعلى خشبة المسارح والله قد أسقط عنها حضور الجمعة والجماعات

ஆனால் பெண்களின் நலன் கருதி ஜமாஅத் மற்றும் ஜும்மா தொழுகைகளில் பங்கேற்குமாறு கூட அல்லாஹ் கட்டளையிடவில்லை.

 

  • தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிப்பது மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றுக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பெண்களின் குரல்களைப் பயன்படுத்துகின்றனர் விரோதிகள். அரசியல் மேடைகளிலும் தொலைத்தொடர்பு சாதனங்களிலும் பேசவிடுகின்றனர்

استغلوا صوتها في جواب المكالمات والاعلانات الالكترونية في شركات الاتصال وغيرها لاستقطاب الزبائن والله يأمرها أن تصفق في الصلاة وتترك التسبيح والتنبيه بالصوت إذا حدث للإمام ما يوجب ذلك، وجعل التسبيح للرجال فقط

ஆனால் இமாம் தொழுகையில் தவறுவிடும் போது கூட ஆண்கள் ஸுப்ஹானல்லாஹ் எனக்கூறி ஞாபகமூட்டுவார்கள். பெண்களோ அவ்வாறு செய்யாது கைதட்டல் மாத்திரமே செய்ய வேண்டுமெனக் கூறி அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது இஸ்லாம்.

 

  • பெண்களை ஒலிம்பிக் வீராங்கணைகளாக்குகின்றனர் கயவர்கள்

جعلوها بطلة الأولومبياد، والمراثونات والله أسقط عنها الجري بين العلمين في المسعى، والرمل في الطواف، حفاظا على حيائها، وصيانة لعفتها

ஆனால் அவர்களின் வெட்கத்தைப் பேணுவதற்காக, ஆண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள, ஸபா மர்வாவுக்கிடையில் இரு விளக்குகளுக்கு மத்தியிலும், தவாபின் ஆரம்பத்திலும் விரைவாகச் செல்வதைக் கூட அவர்கள் மீது விதியாக்கவில்லை இஸ்லாம்.

 

  • மஹ்ரமின்றி சுற்றுலாக்கள் அழைத்துச் செல்கின்றனர் அறிவிலிகள்

أخرجوها في الرحلات الترفيهية بدون محرم، والله أسقط عنها ركنا من اركان الإسلام الذي هو الحج اذا لم تجد محرما

ஆனால் மஹ்ரமில்லாவிட்டால் ஹஜ் கூட கடமையில்லை என்கிறது இஸ்லாம்.

 

  • விளையாட்டு அணிகளை உற்சாகமூட்டுவதற்கு பெண்களை அழைத்துச் செல்கின்றனர் கயவர்கள்

أخرجوها لتشجيع ونصرة المنتخبات الرياضية والله أسقط عنها الخروج للجهاد لنصرة الدين

ஆனால் போர் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஜிஹாதுக்கு செல்வதைக் கூட அவர்கள் மீது விதியாக்கவில்லை இஸ்லாம்.

 

  • அலங்காரத்துடனும் நறுமணத்துடனும் பெண்களை அலையவிடுகின்றனர் அறிவிலிகள்

أخرجوها من بيتها إلى الشارع معطرة مزينة كاشفة عن جمالها مظيفة إليه المساحيق الصناعية، والله أمرها ألا تضرب بالخلخال ، ليسمع الناس ماتخفي من زينتها

ஆனால் பெண்கள் அணியும் சலங்கை ஓசையைக் கேட்டு அவள் அணிந்திருக்கும் அலங்காரத்தை அறிந்துகொள்வதைக் கூட தடை செய்யுமுகமாக, சலங்கை ஓசை எழும்பும் விதமாக நடக்கக்கூட வேண்டாம் என்கிறது அல்குர்ஆன்.

  • தனது நண்பிகளை தனது கணவன்மார்களுக்கு நேரடியாகவோ புகைப்படம் மூலமோ அறிமுகம் செய்கின்றனர்

عودوها حمل صور صديقاتها في هاتفها ومشاهدتها لهن مع زوجها في مواقع التواصل الاجتماعي وغيرها، والله يحرم عليها مجرد ان تصف إمرأة أخرى لزوجها كأنه يراها

ஆனால் ஒரு பெண் தனது கணவனிடம் இன்னொரு பெண்ணை வர்ணிப்பதையே தடைசெய்துள்ளது இஸ்லாம்.

 

இறுதியாக இதோ அல்லாஹ் கூறுவதைப் படியுங்கள்…

அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென விரும்புகிறான். ஆனால் மனோ இச்சைகளைப் பின்பற்றுவோர் நீங்கள் மிகவும் வழிகெட்டுவிட வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். ?4-27

✍தமிழில் – அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி Ph.D., Reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *