சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்!
ஷுரைஹ் அல்காழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“சோதனையால் நிச்சயமாக நான் பீடிக்கப்படுவேன். அப்போது, அதற்காக நான்கு தடவைகள் அல்லாஹ்வை நான் புகழ்ந்து கொள்வேன்.
- ஏற்பட்ட சோதனை, அதைவிட மிகப்பெரியதாக இருக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன்.
- அதற்காகப் பொறுமையுடன் இருக்கும் பாக்கியத்தை அவன் தந்துள்ளான் என்பதற்காகப் புகழ்வேன்.
- நற்கூலியை நான் ஆதரவு வைத்துப் பெறுவதற்காக, ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ ௭ன்று சொல்லும் பாக்கியத்தை அவன் எனக்குத் தந்துவிட்டான் என்பதற்காகப் புகழ்வேன்.
- எனது மார்க்க விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக அச்சோதனையை அவன் ஆக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன்!”
{ நூல்: ‘சியரு அஃலாமின் நுபbலா’, 04/105 }
قال شريح القاضي رحمه الله تعالى: [ إنّي لأصاب بالمصيبة، فأحمد الله عليها أربع مرات:-
? أحمد إذ لم يكن أعظم منها.
? وأحمد إذ رزقني الصّبر عليها.
? وأحمد إذ وفّقني للإسترجاع لما أرجو من الثواب.
? وأحمد إذ لم يجعلها في ديني.
{ سير أعلام النبلاء، ٤/١٠٥ }
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக!
- அவர்கள் யாரெனில், தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!’) என்று கூறுவார்கள்.
- இத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிடமிருந்து புகழுரைகளும், கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள்!”.
(அல்குர்ஆன், 02:155 -157)
தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா