Featured Posts

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! [உங்கள் சிந்தனைக்கு… – 025]

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது!

பாத்திமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்கள்!”
{ நூல்: புகாரி, குர்ஆனின் சிறப்புகள் எனும் தலைப்பு, பாடம்: 07 }

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானின் ஒவ்வொரு இரவும் -ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள்” { நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் – 1902, 4997 }

இமாம், அல்ஹாபிfழ் இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:
“ரமழானின் இரவு நேரத்தில் குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்திக்கொள்ளல் விரும்பத்தக்கது என்பதையே இச்செய்திகள் உணர்த்துகின்றன. ஏனெனில், இரவுப்பொழுது என்பது வேலைப்பளுக்கள் இல்லாமல் போய் விடுகின்ற ஓர் நேரமாகும். மேலும், உட்சாகங்களும் உத்வேகங்களும் அதிலே ஒன்று சேர்ந்து விடுகின்றன. அத்துடன், அதிலே உள்ளத்தையும் நாவையும் சிந்தித்துணர்வதற்கும் (அந்நேரம்) உடன்பட வைக்கிறது!”
{ நூல்: ‘லதாஇபுfல் மஆரிப்f’, பக்கம்: 315 }

قال الإمام الحافظ إبن رجب الحنبلي رحمه الله تعالى:
“وفي حديث فاطمة رضي الله عنها عن أبيها أنه أخبرها « أن جبريل عليه السلام كان يعارضه القرآن كل عام مرة، وأنه عارضه في عام وفاته مرتين»، وفي حديث إبن عباس رضي الله عنهما: « أن المدارسة بينه وبين جبريل كانت ليلا »
فدلّ على استحباب الإكثار من التلاوة في رمضان ليلا. فإن الليل تنقطع فيه الشواغل، وتجتمع فيه الهمم، ويتواطأ فيه القلب واللسان على التدبر !”
{ لطائف المعارف، ص – ٣١٥ }

தமிழில்: அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *