Featured Posts

நோன்பாளி, இப்படித்தான் இருக்க வேண்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 024]

நோன்பாளி, இப்படித்தான் இருக்க வேண்டும்!

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“உண்மையான நோன்பாளி யாரென்றால், அவருடைய உடல் உறுப்புகள் பாவங்களை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்; அவருடைய நாவு பொய், அருவருப்பான பேச்சு, கெட்ட வார்த்தை ஆகியவற்றை விட்டும் விலகியிருக்க வேண்டும்; அவருடைய வயிறு உண்பதை விட்டும், குடிப்பதை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்; அவருடைய வெட்கஸ்தலம் உடலுறவு கொள்வதை விட்டும் விலகியிருக்க வேண்டும்; அவர் பேசினால் தனது நோன்புக்கு பாதிப்பு ஏற்படும்படியாகப் பேசமாட்டார்; ஏதும் செய்தால் தன் நோன்பைப் பாழாக்கும்படியாக எதையும் செய்யமாட்டார்; அவரிடமிருந்து வெளியாகும் பேச்சு அனைத்தும் பயனுள்ளதாகவும் நல்லதாகவுமே இருக்கும்; அவரது செயல்களும் இவ்வாறே இருக்கும். அவரது பேச்சுக்களும், செயல்களும் கஸ்தூரி வியாபாரியோடு இருப்பவர் நுகரும் நல்ல வாசனையின் அந்தஸ்தில் இருக்கிறது! இவ்வாறுதான் நோன்பாளியோடு உட்கார்ந்திருப்பவர், அவருடன் உட்கார்ந்திருப்பதன் மூலம் பயனடைவார்; அத்தோடு கெட்ட வார்த்தை பேசுதல், பொய் பேசுதல், தீமை, அநியாயம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவார்.

மார்க்க ரீதியான அந்தஸ்தைப் பெற்ற நோன்பு இதுதான்! உண்பது, பருகுவதை விட்டும் வெறுமனே தடுத்துக்கொள்ளல் மாத்திரம் நோன்பு கிடையாது. பாவங்களை விட்டும் உடல் உறுப்புகள் நோன்பு நோற்றிருப்பதும், உண்ணல் மற்றும் பருகலை விட்டும் வயிறு நோன்பு நோற்றிருப்பதும்தான் உண்மையான நோன்பாகும்! உண்ணலும் பருகலும் நோன்பை முறித்து அதைப் பாழாக்கி விடுவது போல், பாவங்களும் அதன் கூலியைத் துண்டித்து, அதன் பலனைப் பாழாக்கி விடுகின்றன. அப்போது இது, நோன்பு நோற்காதவனின் நிலைக்கு அவனை ஆக்கி விடுகிறது!”
{ நூல்: ‘அல்வாபிbலுஸ் ஸய்யிப்b’, பக்கம்: 31,32 }

قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
[ والصائم هو الذي صامت جوارحه عن الآثام، ولسانه عن الكذب والفحش وقول الزور، وبطنه عن الطعام والشراب، وفرجه عن الرفث. فإن تكلم لم يتكلم بما يجرح صومه، وإن فعل لم يفعل ما يفسد صومه، فيخرج كلامه كله نافعا صالحا، وكذلك أعماله! فهي بمنزلة الرائحة التي يشمّها من جالس حامل المسك، كذلك من جالس الصائم إنتفع بمجالسته، وأمن فيها من الزور والكذب والفجور والظلم.
هذا هو الصوم المشروع لا مجرّد الإمساك عن الطعام والشراب….؛ فالصوم هو صوم الجوارح عن الآثام، وصوم البطن عن الشراب والطعام؛ فكما أن الطعام والشراب يقطعه ويفسده، فهكذا الآثام تقطع ثوابه، وتفسد ثمرته، فتصيّره بمنزلة من لم يصم “
{ الوابل الصيّب، ص ٣١، ٣٢ }

தமிழில். அஷ்ஷெய்க்N.P.ஜுனைத்(காஸிமி, மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *