அறிஞர்களின் பார்வையில்…. நோன்பும் ஜிஹாதும்!
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
“அல்லாஹ்வின் அடியார்களே! நாம் ரமழான் மாதத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இங்கே ஜிஹாதுக்கும் நோன்புக்குமிடையில் வலுவானதோர் தொடர்பு காணப்படுகின்றது. அதாவது, உணவு மற்றும் பானம் ஆகியவற்றின் ஆசையை வெற்றிகொள்ளக்கூடியதாக நோன்பு இருக்கிறது; ஜிஹாதோ, இவ்வுலக வாழ்க்கை மீது கொள்ளும் பேராசையைக் கழற்றி வெற்றியைக் கொடுக்கின்றது. எதிரிகளுக்கெதிராக வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஜிஹாத் என்றிருக்குமாக இருந்தால், நோன்பு உள்ளத்திற்கெதிராகப் போராடி வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்காகக் கடமையாக்கப்பட்டதாகும். ஜிஹாதில் இருக்கின்ற தியாகமும் அர்ப்பணிப்பும் நோன்பிலும் பெற்றுக்கொள்ளப்படக்கூடியதாகவே உள்ளது.
ரமழான் மாதத்திற்கென உயர்ந்ததோர் அந்தஸ்து காணப்படுகின்றது. ஏனைய மாதங்களுக்கு மத்தியில் இம்மாதம் தனித்துவம் பெற்றும் விளங்குகிறது. அருள்வளம் பொருந்திய ரமழான் மாதத்தில் வெற்றியுடன் வாக்குறுதியளிக்கப்பட்ட சமூகமாக இஸ்லாமிய சமூகம் இருந்துகொண்டிருக்கின்றது. வரலாற்றுப் பக்கத்தையே மாற்றியமைத்து, அதைப் புதியதோர் கோணத்திற்குத் திருப்பிவிட்ட இஸ்லாமியப் போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டம் இம்மாதத்தில்தான் இடம்பெற்றது.
ஹிஜ்ரி 02-ம் ஆண்டு, ரமழான் மாதம், பிறை 17, வெள்ளிக்கிழமை காலை வேளையில் பத்ர் யுத்தம் நடந்தது. இந்த யுத்தம், நிராகரிப்பு மற்றும் அசத்தியத்தில் இருந்த பெரும் படைகளுக்கெதிராக உருவான இஸ்லாமிய அரசு பெற்றுக்கொண்ட முதலாவது யுத்தமாகக் கணிக்கப்படுகின்றது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் பெற்றுக்கொண்ட இவ்வெற்றியானது, சத்திய மார்க்கம் பரவுவதற்கான சுபசோபனமாகவும், இறை நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்குமான ஓர் எச்சரிக்கையாகவும் இருந்தது”.
{ நூல்: ‘அல்முஹ்தார் லில்ஹதீஸி fபீ ஷஹ்ரி ரமழான்’,பக்கம்: 248 }
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
[ عباد الله! ونحن في شهر رمضان فإن هناك ترابطا وثيقا بين الجهاد والصيام، فالصوم مغالبة لشهوة الطعام والشراب، والجهاد مغالبة لنزعة الحرص على الحياة. وإذا كان الجهاد لأجل الإنتصار على العدوّ فإن الصيام إنتصار على النّفس، ومعاني التضحية والفداء في الجهاد مستوحاة من الصيام.
ولشهر رمضان منزلة عالية ينفرد بها دون سواه بين عامة الشهور، وكانت الأمة الإسلامية على موعد مع النصر في شهر رمضان المبارك، ففي هذا الشهر حدثت أكبر المعارك الإسلامية التي غيّرت وجه التاريخ ووجّهته وجهة جديدة.
ففي صبيحة يوم الجمعة الموافق للسابع عشر من شهر رمضان المبارك من السنة الثانية من الهجرة كانت غزوة بدر الكبرى، تلك الغزوة التي تعدّ أول إنتصار تحرزه الدولة الإسلامية الناشئة على جحافل الكفر والباطل، ومن هنا كان إنتصار المسلمين في هذه الموقعة بشيرا بانتشار دين الحق ونذيرا للكافرين والمنافقين ]
{ المختار للحديث في شهر رمضان ، ص – ٢٤٨ }
தமிழில்
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)