இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து
1. வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும் வந்தார்கள் என்றும் உள்ளத்தில் விசுவாசம் கொண்டு நாவால் மொழிதல்.
2. ஐங்காலத் தொழுகையை தவறாது நிறைவேற்றல்.
3. ஜகாத் என்னும் ஏழை வரியை வருடம் தோரும் செலுத்துதல்.
4. ரமலான் மாதம் நோன்பு நோற்றல்.
5. வாழ்க்கையில் ஒரு முறையேனும் (வசதி இருப்பின்) ஹஜ் யாத்திரை செய்தல்.
ஈமான் என்னும் இறை விசுவாசத்தின் அடிப்படைகள்
பின்வரும் விஷயங்களில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
1. அல்லாஹ்விடம்.
2.அவனுடைய மலக்குகளில். (வானவர்களில்).
3.அவன் இறக்கிய வேதங்களில்.
4.அவன் அனுப்பிய திருத் தூதர்களில்.
5.தீர்ப்பு கூறப்படும் மறுமை நாளில்.
6.அல் கத்ர் எனப்படும் விதியில். (அல்லாஹ் ஏவிய அனைத்தும் நிறைவேறும் என நம்புதல்)
“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.
அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.
இன்ஷாஅல்லாஹ் தொடரும்.