Featured Posts

அனாச்சாரங்களைப் பின்பற்றும் ஸூஃபிகள்

ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்காவின் ஹல்கா (திக்ரு) முறை, காதிரிய்யா தரீக்காவின் ராத்தீபு (திக்ரு) முறை, நூரிய்யா தரீக்காவின் வணக்கமுறை என ஒவ்வொரு தரீக்காவினரும் பல்வேறு வணக்க முறைகளை உருவாக்கி இருக்கின்றனர்.

இஸ்லாம்: “….இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்….” (அல்குர்ஆன்: 5:3)

அல்லாஹ் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டபின் எதற்காக புதிய வணக்கமுறைகள்?

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘….செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

‘யாராவது நமது மார்க்கத்தில் இல்லாத புதிய அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ புகாரி ஹதீஸ் எண்:2499.

‘யாராவது நமது மார்க்கத்தில் இல்லாத புதிய அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ முஸ்லிம் ஹதீஸ் எண்:3243

‘பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், உம்ரா, ஹஜ், குர்பானி, தீனுக்கான முயற்சிகள், தீனில் செலவழித்தல் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. குழைத்த மாவில் இருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதுபோல் பித்அத் (நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத புதிய அமல்) செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவான்’ அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா.

ஸுஃபியிஸம்: இதைப் பின்பற்றுபவர்கள் தங்களின் ஸூஃபிகள், ஷெய்குகள், பீர்கள் ஆகியோர்களின் கால்களில் விழுவது, கால்களைத் தொட்டு முத்தமிடுவது போன்ற அனாச்சாரங்களைச் செய்கின்றனர்.

இஸ்லாம்: ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் கால்களில் விழுந்து மரியாதை செய்வதற்கு விரும்பிய ஸஹாபாக்களுக்கு அனுமதியளிக்காதது மட்டுமல்லாமல் இவ்வாறு செய்வதை முற்றிலுமாகத் தடுத்து விட்டார்கள்’ அறிவிப்பவர்: கைஸ் இப்னு ஸஃது (ரலி), நூல்: அபூதாவூத் (1828), தாரமீ (1427)

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *