232- நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை குதிரையின் மீது ஏறிய போது கீழே விழுந்து விட்டார்கள். அதனால் அவர்ளுடைய வலது விலாப் புறத்தில் அடிபட்டது. அவர்களை நாங்கள் நோய் விசாரிக்கச் சென்றோம். தொழுகை நேரம் வந்ததும் தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்தவாறு தொழுதோம். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளர்!; அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்: அவர் ருகூவு செய்தால் நீங்களும் செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள் அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வலகல் ஹம்து என்று சொலல்லுங்கள்: அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
233- நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது தங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து தொழுதார்கள். அவர்களின் பின்னால் சிலர் நின்றவாறே தொழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை அமரும்படி சைகை செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்த பின்னர் இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள் . அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்.
234- இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே எனவே அவர் தக்பீர் கூறும்போது நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் ஸமியல்லாஹூ லிமன் ஹமிதா எனக் கூறும் போது நீங்கள் ரப்பனா வலக்கல் ஹம்து எனக் கூறுங்கள். அவர் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழுவிக்கும் போது நீங்களும் அவரோடு சேர்ந்து உட்கார்ந்து தொழுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.