Featured Posts

உலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’! [உங்கள் சிந்தனைக்கு… – 050]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“மனிதனின் பதிவேட்டில் இருக்கின்ற ஒரு தஸ்பீஹ், இவ்வுலகையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். ஏனெனில், இவ்வுலகமும் அதிலுள்ளவையும் அழிந்து போகக்கூடியவை; (நிலைக்காது) நீங்கிவிடக் கூடியவை. தஸ்பீஹும், நற்செயலும் நிலைத்து நிற்கக்கூடியவையாகும்!”
{ நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 03/478 }

قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ إن التسبيحة الواحدة في صحيفة الإنسان خير من الدنيا وما فيها. لأن الدنيا وما فيها تذهب وتزول! والتسبيح والعمل الصالح يبقى!! ]
{شرح رياض الصالحين، ٣/٤٧٨ }

நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“இரண்டு வாக்கியங்கள் இருக்கின்றன. அவை, (மொழிவதற்கு) நாவுக்கு எளிதானவையாகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும்; அளவற்ற அருளாளனுக்கு பிரியத்திற்குரியவையுமாகும். அவை:

سبحان الله العظيم، سبحان الله وبحمده !

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்!) { நூல்: புகாரி – 6406 }

 

தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *