வெளித்தோற்றத்தைப் பார்த்து எவரையும் தவறாக எடைபோட்டு விடாதீர்கள்!!
இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“(சஊதிஅரேபியாவின்) ரியாத் நகரிலுள்ள கல்விக் கலாபீடமொன்றில் நாம் மாணவர்களாக இருந்துகொண்டிருந்தோம். அந்நேரம் வகுப்பில் நாம் இருந்துகொண்டிருந்தபோது ஷெய்க் ஒருவர் எங்களிடம் வந்தார். அவரை நீங்கள் பார்த்திருந்தால், ‘இவர் ஓர் நாட்டுப்புற அரபியாகத்தான் இருப்பார்; அறிவிலிருந்து கொஞ்சம்கூட இவரிடம் எடுப்பதற்கு இல்லை!’ என்றுதான் நீங்கள் சொல்லியிருப்பீர்கள். அந்தளவு கந்தலான ஆடையுடன் அவர் காணப்பட்டார். மரியாதைப் பயம் கொள்ளும் அளவுக்குரிய தாக்கங்களும் அவரிடம் இருக்கவில்லை. அவரின் வெளித்தோற்றத்தின் மூலம் அவர் முக்கியத்துவப்படுத்தப்பட முடியாதவராக இருந்ததால் (முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பதை விட்டும்) எமது கண்களிலிருந்து அவர் விழுந்துவிட்டார். அப்போது நான், ‘அல்லாமா அப்துர்ரஹ்மான் அஸ்ஸஃதீ’ அவர்களை நினைவுபடுத்திக் கொண்டேன்; ‘அல்லாமா அப்துர்ரஹ்மான் அஸ்ஸஃதீ அவர்களை விட்டுவிட்டு, இந்த நாட்டுப்புற அரபிக்கு முன்னால் வந்து நான் உட்கார்ந்துகொண்டு இருப்பதா?’ என்றும் எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்.
வந்தவர் தனது பாட வகுப்பை நடத்த ஆரம்பித்தபோது, மதிப்புமிக்க அவரது அறிவுக் கடலிலிருந்து கல்விப் பயன்கள் என்ற முத்துக்கள் எம்மீது சொரிந்துகொண்டிருந்தன. அப்போது நாம், அறிஞர்களில் மிக நல்ல ஒருவருக்கு முன்னாலும், அறிவில் எல்லோரையும் மிஞ்சும் அளவுக்குள்ள திறமையானவருக்கு முன்னாலும் இருப்பதாக அறிந்து கொண்டோம். மேலும் அவரது அறிவு, அவரது பண்பு, அவரின் குணம், அவரது உலகப்பற்றற்ற தன்மை, அவரது பேணுதல் ஆகியவற்றிலிருந்து பயனடைந்துகொண்டோம். அவர் வேறு யாருமல்ல; அவர்தான் அல்லாமா முஹம்மத் அல்அமீன் அஷ்ஷன்கீதீ அவர்கள்!”.
{ நூல்: ‘fபதாவா வதுரூஸ்’ லிப்னி உஸைமீன், பக்கம்:10 }
يقول العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ كنّا طلّابا في المعهد العلمي في الرياض وكنّا جالسين في الفصل، فإذا بشيخ يدخل علينا، إذا رأيته قلت: هذا بدوي من الأعراب ليس عنده بضاعة من العلم، رث الثياب، ليس عليه آثار الهيبة، لايهتم بمظهره فسقط من أعيننا! فتذكرت الشيخ عبد الرحمن السعدي، وقلت في نفسي: أترك الشيخ عبدالرحمن السعدي وأجلس أمام هذا البدوي؟
فلما ابتدأ الشنقيطي درسه انهالت علينا الدّرر من الفوائد العلمية من بحر علمه الزاخر. فعلمنا أنّنا أمام جهبذ من العلماء وفحل من فحوله، فاستفدنا من علمه وسمته وخلقه وزهده وورعه ]
{ من فتاوى ودروس إبن عثيمين، ص – ١٠ }
தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம், வவுனியா
[ 08/07/2018 ]