காம இச்சையைத் தீர்ப்பதற்காக கண்ணியமிகு மார்க்கத்தை விட்டும் ஓடிப்போய் விடாதீர்கள்!
அனஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:-
“(எனது தந்தை ‘மாலிக் பின் நள்ர்’ அவர்கள் மரணித்ததன் பின்னால் விதவையாக இருந்த எனது தாய்) ‘உம்மு சுலைம் பின்த் மில்ஹான்’ (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்களை மணம் முடிக்க விருப்பம் கேட்டு ‘அபூதல்ஹா’ என்பவர் வந்தார். அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை! எனது தாய் அவரிடம், ‘உம்மை முடிக்க எனக்கு நல்ல விருப்பம்தான்; உம்மைப் போன்றோரின் அழைப்பு மறுக்கப்படவும் முடியாததே! என்றாலும், நீர் ஒரு இறைமறுப்பாளர்; நானோ ஒரு முஸ்லிம். இஸ்லாத்தை நீர் ஏற்றுக்கொண்டு என்னை நீங்கள் மணம் முடித்தால் அதையே எனது மணக்கொடையாக (மஹராக) நான் ஏற்றுக்கொள்வேன். இதைத் தவிர வேறெதையும் உம்மிடம் நான் கேட்கமாட்டேன்!’ என்று கூறினார்கள். உடனே, ‘அபூதல்ஹா’ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, (எனது தாய் ‘உம்மு சுலைம்’ ) அவர்களை மணம் முடித்துக்கொண்டார்கள்”.
{ நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’, 02/59 }
عن أنس رضي الله عنه قال: [ خطب أبو طلحة امّ سليم قبل أن يسلم؛ فقالت: « أما إني فيك لراغبة، وما مثلك يردّ، ولكنك رجل كافر، وأنا إمرأة مسلمة. فإن تسلم فذاك مهري، لا أسألك غيره! » فأسلم أبو طلحة، فتزوّجها ]
{ حلية الأولياء، ٢/٥٩ }
தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 12/07/2018 ]