Featured Posts

எங்கும் நிறைந்தவனா இறைவன்? [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-01

சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி நகரில் அத்வைதம் என்னும் வழிகேட்டையும், அதனோடு சேர்ந்த இன்னபிற மார்க்க விரோதச் செயற்பாடுகளையும் விதைத்து, அந்த விஷ செடியினை வளரசெய்தவன் காந்தகுடி அப்துர் ரவூப் மிஸ்பாஹி (மவ்லவி??!!). இக்கொள்கையின் பாரதூரங்களை அறியாமல் இன்றயளவும் இக்கோர கொள்கையில் சிக்கி தவிப்பவர்களை மீட்டெடுக்கவும், ஏனையவர்கள் இந்த வழிகேட்டின் பக்கம் செல்லாமல் இருப்பதற்காகவும் இக்கட்டுரை எமது இஸ்லாம்கல்வி இணையதளத்தில் பதிவிடப்படுகின்றது. இக்கட்டுரையை ஆசிரியர் ரிஸ்வான் மதனி (அபூநதா) பாமர முஸ்லிமும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான முறையில் தொகுத்து வழங்கியுள்ளார். அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

எமது இணையதள வாசகர்கள் தொடர்ந்து இக்கட்டுரையை வாசித்து பயன்பெறுவதோடு பிறரையும் வாசிக்க வைக்கவும்.

[இஸ்லாம்கல்வி ஊடக குழுவினர்]

பொய்க் கடவுள்களும், உண்மையான அல்லாஹ்வும்.

الله அல்லாஹ் என்ற சொல்லுக்கு இணையான ஒரு சொல் இல்லவே இல்லை.

ஒரு முஸ்லிம் தனக்கோ, அல்லது தனது குழந்தைகளுக்கோ பெயர் வைக்கின்ற போது அல்லாஹ் என்ற பெயரை மட்டும் அவனுக்குரியதாக சூட்ட முடியாது என்பது இஸ்லாத்தின் விதியாகும்.

அல்லாஹ் என்றும் நித்திய ஜீவனாகும். அவன் உலகம் தோன்றும் முன்பிருந்தே இருந்து வருபவன். அவன் அர்ஷ், குர்ஸி, வானவர்கள், பூமி இதர கோள்கள் மனிதர்கள், ஜின்கள் போன்ற அவனது படைப்புக்கள் அனைத்தையும் படைப்பதற்கு முன்பிருந்தே

  • தனித்தனவனாக,
  • யாரோடும் கூட்டுச் சேராதவனாக,
  • வணக்கம், படைப்பு, இறையாண்மை, இறைத்தன்மை எதிலும் கூட்டை விரும்பாதவனாக,
  • மனைவி, குழந்தை குட்டிகளை எடுத்துக் கொள்ளாதவனாக,
  • யாராலும் பிறந்தவனாகவோ, பெற்றெடுக்கப்பட்டவனாகவோ இல்லாதவனாக,
  • முன்னுதாரணமின்றி, படைப்பவனாக,
  • தந்நிகரற்றவனாக, இன்னும் பல பண்புகளுக்கு உரித்தானவனாக இருந்து வருகின்றான்.

உண்மையான الله அல்லாஹ்-வை எவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்பது?

உலகில் அல்லாஹ் அல்லாத அனைத்தும் படைக்கப்பட்டதாகும். அவை எவ்வாறான குறைகளை தம்மில் பொதிந்து வைத்துள்ளன என்பது தன்னைக் கடவுளாக, கடவுளின் அவதாரமாக இன்றும் பொய்ப் பிரச்சாரம் செய்த அனைவரும் அறிந்ததே! இவர்கள் தம்மை அல்லாஹ் எனப் பிரச்சாரம் செய்தாலும் அவர்களின் இறுதி முடிவு அல்லாஹ்விடம் எவ்வாறு அமையப் பெறும், அமையப் பெற்றது என்பது பற்றியும் குர்ஆன் விளக்கி இருக்கின்றது.

காத்த நகர் ரவூஃபின் முன்மாதிரி ஃபிர்அவ்ன்னும் , இப்னு அரபியுமாகும்.

எல்லாம் நானே என அல்லாஹ் சொன்ன கொள்கை கிடையாது.

அத்வைதிகள் அனைவரும் தமது உலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பின்வருமாறு புலம்பினர்.

  • நானும் அவனே,
  • அனைத்தும் அவனே,
  • தாயும் அவனே,
  • தந்தையும் அவனே,
  • மலையும் அவனே,
  • காற்றும் அவனே,
  • மழையும் அவனே,
  • கடலும் அவனே,
  • நீரும் அவனே,
  • நெருப்பும் அவனே,
  • செருப்பும் அவனே,
  • கோயில் பூசாரியும் அவனே,
  • நாயும் அவனே , பன்றியும் அவனே, போன்ற வழிகெட்ட, கிரேக்க மற்றும் இத்துப் போன அத்வைத இந்து மதம் தத்துவங்களால் தமது உலக ஆசைகளை அடைந்து கொள்ள ஆரிஃபீன்கள், மகான்கள் சொன்னது என அதற்கு பொய்நாமம் சூட்டிக் கொண்டனர்.

இப்னு அரபி என்பவன் அல்லாஹ்வை கேவலப்படுத்தி, தானும் வழிகெட்டது மட்டுமின்றி, முஸ்லிமாகப் பிறந்த மற்ற முஸ்லிம் மக்களையும் வழிகெடுத்ததை இப்னு அரபி தொடர்பாக வாசிக்கின்ற போது அவதானிக்க முடிந்தது.

அந்த துர்நாற்றம் பிடித்த, காலாவதியாகிப் போன அப்பட்டமான பச்சை வழிகேட்டை தத்துவம் என்ற பெயரில் இப்னு அரபியின் சிஷ்யன் ரவூஃபும் மக்கள் முன் கொண்டு வந்து அவர்களை வழிகெடுப்பதை நாம் வழிகேடு, நரக வழி எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்துர் ரவூஃபின் நெருங்கிய வழிகேடர்கள்.

இந்த வழிகேடனோடு சுன்னத் ஜமாத் போர்வையில் பசுந்தோல் போ(ர்)த்திய புலிகளாக அஷ்அரிய்யாப் பெயரில் வலம் வரும் வழிகெட்ட ஜஹ்மிய்யாக்களை பின்தொடரும் இலங்கை வாழ் மௌலவிகள் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் சில போது அத்வைதிகளாகவும், சில நேரங்களில் அல்லாஹ்வின் முகம், கரம், உறக்கம் போன்ற பண்புகளை மனித பண்புகளுக்கு ஒப்பிடாமல், முறை கற்பிக்காமல் வெளிப்படையான பொருள் கொள்ளாது, மனித பண்புகளோடு ஒப்பிட்டு பின்னர் அதற்கு தவறான அர்த்தம் தருவதையும் பார்க்கின்றோம்.

இவர்கள் சாதாரண ஃபிக்ஹ் விஷயங்களில் நல்லறிஞர்களான ஷாஃபி, அஹ்மத் , மாலிக் போன்ற அறிஞர்களையும் , அகீதாவில் (அடிப்படையில்) அவர்களை உதைத்து தள்ளிவிட்டு பிற்காலத்தில் வந்த வழிகேடர்களை இவர்கள் இன்றும் பின் பற்றுவதால் அல்லாஹ் என்பவன் யார்? அவன் எங்கு உள்ளான்? அர்ஷின் மீதிருக்கின்றானா? எங்கும் நிறைந்தோனா? மறுமை நாளில் நமது கண்களால் நேரடியாக நாம் பார்க்க விருக்கும் அந்த உயர்ந்த இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு இப்போது, இவ்வுலகில் குறித்த தோற்றம் ஒன்று இல்லை எனில் அவன் எந்தத் தோற்றம் எடுத்து வரூவான்? இங்கே அவனுக்கென குறித்த தோற்றம் இல்லாத போது அவனை இங்கு போன்று அங்கும் காணசாத்தியமா? போன்ற எவ்விதமான தெளிவும் அற்ற மந்தைகளாக இருப்பது அவர்களின் உரைகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழிகாட்டுவானாக!

அல்லாஹ்வின் மகத்துவம்

  • மகத்துவமிக்க அல்லாஹ் கண்ணியமானவன்,
  • அவன் எப்போதும், எல்லா நிலைகளிலும்,
  • இம்மையிலும் மறுமையிலும்,
  • அவனது படைப்புக்களோடு இரண்டரக்கலக்காது,
  • அர்ஷின் மீதிருந்தவாறு அவன் ஆட்சி செய்து வருவான். அதுவே அவனது கண்ணியமாகும்.

அல்லாஹ்வின் படைப்புக்கள் தெய்வமாகவோ, தெய்வீக வெளிப்பாடுகள் கொண்டதாகவோ ஆகுமுடியாது

அல்லாஹ்வின் படைப்புகளாகிய மனிதர்களுக்கு பிறப்பு இறப்பு, முன் ஆரம்பம் இறுதி முடிவு, அதன் பின்னும் மற்றொரு ஆரம்பம், அதன் பின் மரணமற்ற வாழ்வு போன்ற பல நிகழ்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும் .

படைப்புக்கள் அனைத்தும் பொதுவாக இல்லாமை என்ற நிலையில் இருந்து உயிர்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் அதிபதியும் அல்லாஹ்வே! எனவே அவை ஆரம்பம் முடிவு என்ற இரு நிலைகளைக் கொண்டவைமாகும்.

அல்லாஹ்வோ அவ்வாறான குறைவுள்ள மனிதப் பண்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவனாகும். எனவே அவனது படைப்புகள் என்றும் அவனாகவோ, அவனது வெளிப்பாடாகவோ ஆக முடியாது.

பொய்யான தெய்வங்கள் என எவ்வாறு அடையாளம் காண்பது?

அல்லாஹ் தவிர்த்து அனைத்து விதமான தெய்வங்களும் பொய்யான தெய்வங்களே!  என்பது குர்ஆனின் சுருக்கமான நோக்காகும். அவைகள்/அவர்கள் பகுத்தறிவு சார்ந்ததாகவோ, அல்லது அற்றதாகவோ எவையாக இருப்பினும் சரியே! அவை அனைத்தும் அல்குர்ஆனின் கடவுள் கொள்கைக்கு மாற்றமான நரகத்திற்கு இட்டுச் செல்லும் தெய்வங்களே அன்றி வேறில்லை.

நரகை நோக்கி அழைத்துச் செல்லும் கடவுளர்களுக்கான உதாரணங்கள்.

  1. அல்லாஹ்வவோடு இணைத்து வணங்கப்படும் கப்றுகள்,
  2. அங்கு அடங்கப்பட்டுள்ள இயேசுநாதர், முகம்மது நபி ஸல் அவர்கள் போன்ற இறைத்தூதர்கள்,
  3. மனிதர்களை வழிபடுவோர்,
  4. வானவர்களை வணங்கி வழிபடுவோர்,
  5. சிலைகள்,
  6. சூரியன், சந்திரன்
  7. எலி, குரங்கு போன்ற ராட்சத மற்றும் சாதாரண படைப்புக்களைக் குறிப்பிட
    முடியும்.

الحمد لله بنعمته تتم الصالحات

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *